fbpx

காதலியை கரம்பிடித்தார் விஜய் டிவி புகழ்..! பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து..!

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான காமெடியன் புகழ், இன்று தன்னுடைய காதலியான பென்சியாவை திருமணம் செய்துகொண்டார்.

விஜய் டிவியில் கலக்கப் போவது சாம்பியன் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, அதில் தனித்துவம் பெற்று, பின்னர் ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் அதீத கவனம் பெற்று, அந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமானவர் நகைச்சுவை நடிகர் புகழ். பெயருக்கு ஏற்றார் போல, விஜய் டிவி புகழாக மாறி வரும் அவர், தனது காதலி பென்சியாவை மணந்துள்ளார். 

காதலியை கரம்பிடித்தார் விஜய் டிவி புகழ்..! பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து..!

விஜய் சேதுபதி படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம், நடிகர் சந்தானத்தில் ஏஜண்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் புகழ், சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் படுபிஸியாக உள்ளார். தனது காதலி குறித்து, கடந்த சில நாட்களாகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்து புகழ், அது தொடர்பான பதிவுகள் மூலம், லைக்ஸ்களை அள்ளி வந்தார். இந்நிலையில் இன்று காலை, அவர்களது திருமணம் உறவினர்கள் சூழ சிறப்பாக நடந்து முடிந்தது. மேலும், தனது அன்பு காதல் மனைவிக்கு பங்களா வாங்கப் போவதாக கூட புகழ் அறிவித்திருந்தார். அந்த அளவுக்கு இவர்களது காதல், அனைவரும் அறியும் படியாக வெளிப்படையாக இருந்தது. 

காதலியை கரம்பிடித்தார் விஜய் டிவி புகழ்..! பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து..!

விழுப்புரம் மாவட்டம் தீபனூரில் உள்ள பொய்யாமொழி விநாயகர் கோயிலில் நடந்த திருமணத்தில், இந்து முறைப்படி அனைத்து சம்பிரதாயங்களும் நடைபெற்றன. மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் சூழ உறவினர்கள் வாழ்த்த, சுபநிகழ்வாக நடந்து முடிந்தது புகழ் திருமணம். பிரபலங்கள் பலரும் புகழுக்கு சமூகவலைதளங்களில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், செப்டம்பர் 5ஆம் தேதி திருமணம் நடைபெறும் என முன்பு தகவல் வெளியான நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதியே காதலியை கரம்பிடித்தார் புகழ். இந்நிலையில், செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறலாம் என கூறப்படுகிறது. இதில் சின்னத்திரை, வெள்ளத்திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். 

Chella

Next Post

குடித்துவிட்டு வந்து ஆட்டம் போட்ட கணவன்; மனைவி அரிவாளால் வெட்டியதால்.. உயிரிழந்த பரிதாபம்..!

Thu Sep 1 , 2022
மயிலாடுதுறை அருகே முழையூர் மண்தாங்கி திடல் பகுதியில் வசிக்கும் ராமசாமி மகள் ரம்யா (28). இவர் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு கோவையில் ஒரு கம்பெனியில் வேலை செய்தார். அப்போது, ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்த நெல்லையை சேர்ந்த ஜோசப் என்பவரது மகன் குமாரை (36) காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். குமார் தொடர்ந்து குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதும், […]
தொழில் அதிபர் கழுத்தறுத்து கொலை..! 120 பவுன் தங்க நகைகள் பறிமுதல்..! வெளியான திடுக்கிடும் தகவல்..!

You May Like