fbpx

அட்லீயை கழட்டிவிட்ட விஜய்..!! ’தளபதி 68’ இயக்குனர் இவர்தான்..!! என்ன கதை தெரியுமா..?

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் தயாராகி வருகிறது. இன்னும் ஓரிரு மாதத்தில் லியோ படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்பதால், தற்போதே விஜய் நடிக்க உள்ள தளபதி 68 படம் குறித்த தகவல்கள் தொடர்ந்து கசிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அப்படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. முதலில் இப்படத்தை அட்லீ இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், அண்மையில் ரஜினி – லோகேஷ் கூட்டணி உறுதியானதால், அந்த புராஜெக்டில் தன் முழு கவனத்தையும் செலுத்தி வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகும் படத்தை கிடப்பில் போட்டது. இதனால் தளபதி 68 பட இயக்குனர் ரேஸில் இருந்து அட்லீ விலகியது உறுதியானது.

இதையடுத்து தான் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இந்த ரேஸில் இணைந்தார். அவர் சமீபத்தில் நடிகர் விஜய்யை சந்தித்து கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இயக்குனர் கோபிசந்த் மலினேனி தெலுங்கில் கிராக், வீரசிம்ஹா ரெட்டி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியவர். இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் பிறந்தநாளன்று இப்படம் குறித்த அப்டேட்டும் வெளியாக வாய்ப்புள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படத்தில் விஜய் நாயகனாக நடிப்பார் என ஏற்கனவே நடிகர் ஜீவா ஒரு பேட்டியில் கூறியதால், கோபிசந்த் மலினேனி இயக்க உள்ள தளபதி 68 படத்தை அந்நிறுவனம் தயாரிக்க அதிகளவு வாய்ப்புகள் இருக்கிறது. இப்படம் அந்நிறுவனம் தனியாக தயாரிக்காமல் தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் இதற்கு முன்னதாக வாரிசு படத்தில் தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் இணைந்து பணியாற்றி இருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனருக்கு வாய்ப்பளித்துள்ளதால், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ.135 கோடி சம்பளமாக வழங்கப்பட இருப்பதாகவும் டோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

Chella

Next Post

இதுக்கே அசந்து போனால் எப்படி இன்னும் நிறைய இருக்கு…..! நிதியமைச்சருக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் சிக்கல்….! பாஜக அதிரடி திட்டம்….!

Thu Apr 27 , 2023
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் ஆடியோவில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மகன் மற்றும் மருமகன் 30,000 கோடி ரூபாயை ஒரே வருடத்தில் சம்பாதித்து இருக்கிறார்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவதை போல் இருந்தது. அதன் பின்னர் இரண்டாவது ஆடியோவில் திமுக கட்சி அவர் விமர்சிப்பது போல இருந்தது. ஆனால் அமைச்சர் பழனிவேல் […]

You May Like