இன்று நள்ளிரவு ஓடிடி-யில் வெளியாகிறது ’விக்ரம்’..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

இன்று இரவு 12 மணிக்கு disney+hotstar ஓடிடி தளத்தில் விக்ரம் திரைப்படம் வெளியாகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி விண்ணை முட்டும் அளவுக்கு மெகா வெற்றி பெற்ற படம் ’விக்ரம்’. படம் வெளியாகி ஒரு மாத ஆன நிலையிலும், தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் இன்னும் அதே வரவேற்போடு ஓடிவருகிறது. தன்னுடைய சினிமா பயணத்தில் இதுவரை கண்டிராத மகத்தான ப்ளாக் பஸ்டர் வெற்றியை இந்த படம் கொடுத்திருப்பதாக நடிகர் கமல்ஹாசனே பெருமை கொள்ளும் அளவுக்கு விக்ரம் பார்க்கப்படுகிறது. ஏஜெண்ட் டீனா, கமல் முகமூடி கழட்டும் காட்சிகள், சந்தனத்தின் சண்டை மட்டும் காமெடி காட்சிகள் உள்ளிட்ட டெம்ப்ளேட்டுகளை கொண்ட மீம்ஸும் அனிருத்தின் இசையை கொண்ட vibe பாடல்களும் இணையத்தை இன்னும் அலங்கரத்துக்கொண்டே இருக்கின்றன.

இன்று நள்ளிரவு ஓடிடி-யில் வெளியாகிறது ’விக்ரம்’..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை கமல் செய்யாத முயற்சிகளே இல்லை. நடிகர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குநர் என சகலகலா வல்லவனாக வலம் வந்த போதிலும் அவரின் முயற்சிக்கும், உழைப்புக்கும் தீனி போடும் அளவிலான மெகா வெற்றிகளை அவரால் சுவைக்க முடிந்ததில்லை. 70-களின் இறுதியில் தொடங்கி இன்று வரை தொடரும் ரஜினி- கமலின் ரேஸில் கூட தொடர்ந்து ரஜினியின் கைகளே ஓங்கியிருந்தது. இந்நிலையில், ரஜினி, விஜய், அஜித் என அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆச்சரியப்படும் வகையில் ஒரு அசாத்திய வெற்றியை கொடுத்திருக்கிறது விக்ரம்.

Vikram movie ott release date official announcement - கமலின் விக்ரம்  ஓடிடியில் வெளியாகும் தேதி… அதிகாரப்பூர்வ அறிவிப்பு – News18 Tamil

இந்நிலையில் இன்று இரவு சரியாக 12 மணிக்கு இப்படம் disney+hotstar ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே திரையரங்குகளில் பலமுறை பார்த்தவர்கள், திரையரங்குகளில் பார்க்க முடியாதவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் விக்ரமின் அடுத்த ரவுண்டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். பொதுவாக திரையரங்கில் வெளிவந்து பிறகு ஓடிடியில் வெளியானவுடன் அப்படம் இணையத்தில் மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவது வழக்கம். திரையரங்கில் வெற்றிபெற்ற டான் திரைப்படம் ஓடிடியில் வெளியானவுடன் பெரும் கேலி கிண்டலுக்கு உள்ளானது. இந்நிலையில், விக்ரம் படத்திற்கும் அதுபோலான விமர்சனங்கள் வருமா அல்லது மீண்டும் பாஸிட்டிவ் விமர்சனங்களுடன் மாஸாக ஒரு ரவுண்ட் அடிக்குமா என்கிற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Chella

Next Post

பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓபிஎஸ்..! எடப்பாடி தரப்புக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய ஐகோர்ட்..!

Thu Jul 7 , 2022
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு நகலை ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பின்னர் விசாரணை தொடங்கியது. தற்போது பொதுக்குழு கூட்டியதே செல்லாது என்பதே எங்கள் வழக்கு என்றும் இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காகவே இந்த பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்றும் ஓபிஎஸ் […]

You May Like