fbpx

75 நாட்களை கடந்த ’விக்ரம்’..! புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!

விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 75 நாட்கள் ஆகிய நிலையில் படக்குழு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ஜூன் 3ஆம் தேதி வெளியான திரைப்படம் ’விக்ரம்’. இப்படம் உலகம் முழுவதும் 5,000 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இதுவரை தமிழ் திரைத்துறையின் வசூல் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து கமல் தமிழ் திரையுலகிற்கு கம் பேக் கொடுத்தார். மேலும், படம் வெளியாகிய அடுத்த மாதமே ஓடிடியில் இப்படம் வெளியாகினாலும், இன்னும் பல திரையரங்குகளில் ’விக்ரம்’ ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் திரையரங்கத்தில் வெளியாகி இன்றுடன் 75 நாட்கள் ஆகிய நிலையில் படக்குழு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

75 நாட்களை கடந்த ’விக்ரம்’..! புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!

விக்ரம் படத்தில் லோகேஷ், கைதியின் கதையை இணைத்து ரசிகர்களின் எதிர்பார்த்ததிற்கும் மேல் பல அசத்தலான காட்சிகளை அமைத்துத் திரை அரங்குகளை அதிரச்செய்தார். மேலும், ‘சூர்யா’ வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாகவே அமைந்தது. கமல்ஹாசனே இப்படத்திற்கு தயாரிப்பாளர் என்பதால் அவருக்கு டபுல் ஜாக்பாடாக அமைந்தது. மேலும், அடுத்தடுத்த பட அறிவிப்புகளை அளித்துத் திரை ரசிகர்களை ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மேலும், தனது தயாரிப்பில் தற்போது சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை வைத்து படம் தயாரிக்க உள்ளார்.

Chella

Next Post

பாஜகவுடன் நட்பா..? நட்பில்லையா..? ’முடிவு திமுகவிடம்’ - நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி

Tue Aug 16 , 2022
நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆவார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், ”அதிமுகவுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் பாஜக உறுதியாக உள்ளது. அது எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும் சரி.. ஓ.பன்னீர்செல்வமாக இருந்தாலும் சரி..! மத்திய அரசுடன் மாநில அரசு ஒருங்கிணைந்து செயல்பட்டால் மக்களுக்கு நன்மையாக இருக்கும்.. […]
பாஜகவுடன் நட்பா..? நட்பில்லையா..? ’முடிவு திமுகவிடம்’ - நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி

You May Like