fbpx

உதயநிதி அமைச்சரானதும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் நடந்த அதிரடி மாற்றம்..!! என்ன தெரியுமா..?

தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் கடந்த 2008ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான குருவி திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அப்படத்தை அவரின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. இதையடுத்து, சூர்யாவின் ஆதவன், கமலின் மன்மதன் அம்பு என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்த இவர், ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். இதையடுத்து தான் நடிக்கும் படங்களை மட்டும் தயாரித்து வந்த உதயநிதி, தற்போது அரசியலில் இறங்கிவிட்டதால் சினிமாவுக்கும் முழுக்கு போட்டுள்ளார். சமீபத்தில் அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்தார்.

உதயநிதி அமைச்சரானதும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் நடந்த அதிரடி மாற்றம்..!! என்ன தெரியுமா..?

இருப்பினும் தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் தொடர்ந்து படங்களை தயாரிக்கவும், விநியோகம் செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், தற்போது அந்த ரெட் ஜெயன்ட்டிலும் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதுவரை ரெட் ஜெயன்ட்டின் லோகோ திரையிடப்படும்போது ’உதயநிதி ஸ்டாலின் வழங்கும்’ என குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் தற்போது, அதிலிருந்து உதயநிதியின் பெயரை தூக்கிவிட்டு ‘ரெட் ஜென்ட் மூவீஸ் வழங்கும்’ என்று குறிப்பிடுமாறு உத்தரவிட்டுள்ளனர். இதன்மூலம் இனி ரெட் ஜெயன்ட் வெளியிட உள்ள செம்பி, துணிவு, வாரிசு (4 ஏரியா), விடுதலை, பொன்னியின் செல்வன் 2 போன்ற படங்களில் ’ரெட் ஜெயன்ட் மூவீஸ் வழங்கும்; என்பது தான் இடம்பெற்று இருக்கும் என தெரியவந்துள்ளது. உதயநிதி அமைச்சர் ஆகிவிட்டதால் அவரது பெயர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

திருமணமானவருடன் தவறான உறவு..!! உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட நடிகை ஆண்ட்ரியா..!! ஷாக் தகவல்கள்..!!

Sun Dec 18 , 2022
திருமணமான ஒருவருடன் தவறான உறவில் இருந்ததாகவும் அதனால் ஏற்பட்ட உடல் மற்றும் மனவலி காரணமாக படங்களில் நடிக்காமல் இருந்துள்ளதாகவும் நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக இருந்து பின் கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஆண்ட்ரியா. பின் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்து தரமணி, வடசென்னை போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று […]
திருமணமானவருடன் தவறான உறவு..!! உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட நடிகை ஆண்ட்ரியா..!! ஷாக் தகவல்கள்..!!

You May Like