விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு தற்போது திருமணம் வரை சென்றுள்ள அமீர்-பாவனி குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டுக்குள் ஆரம்பத்தில் இருந்து அமீரின் காதலை ஏற்க தயக்கம் காட்டிய பாவனி, பிக்பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சி நிறைவடையும் தருணத்தில் காதலை ஏற்றுக்கொண்டு அமீருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். அதன்பின் சில ஆல்பம் பாடல்களில் நடித்து வந்த இருவரும், நடிகர் அஜித்தின் துணிவு படத்தில் அதே காதல் ஜோடிகளாக நடித்தனர். துணிவு படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவத்தையும் தங்களின் காதல் விவகாரம் தெரிந்து அஜித் என்ன சொன்னார் என்பதையும் ஓப்பனாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் அமீர்-பாவனி அளித்த பேட்டி ஒன்றில் இருவருக்கும் பிப்ரவரி 15ஆம் தேதி திருமணமா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பாவனி, அப்படியொன்றும் இல்லை நான் சும்மா அந்த தேதி அப்டேட்டை கூறினேன் என தெரிவித்தார். திருமணம் இருக்கிறது.. ஆனால், இப்போது இல்லை எனவும், சினிமாவில் நடிக்க இப்போது தான் ஆரம்பித்திருக்கிறோம் என்று அமீர் தெரிவித்தார்.