fbpx

என் கூட ஒரு நாள் இருக்கனுமா..? என்னிடமே கேளுங்கள்..!! நடிகை ரேகா நாயர் ஓபன் டாக்..!!

பரபரப்பு நடிகையாக அறியப்படும் ரேகா நாயர், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், ‘‘பிக்பாஸ் அடுத்த சீசனில் நான் வருவதாக பேசப்படுகிறது. எனக்கு தெரிந்து அப்படி எதுவும் இல்லை. கடந்த சீசனிலேயே இந்த பேச்சு இருந்தது. சித்து பற்றி பேசிய ரேகா நாயர் வருகிறார் என்றார்கள். இப்போது பயில்வானை அடித்த ரேகா நாயர் வருகிறார் என்கிறார்கள். நான் கன்டண்ட்டா இருக்கேன், அதனால் என் பெயரை இழுக்கிறார்கள். இன்று வரை என்னுடைய வாட்ஸ் அப்பில் பிக்பாஸில் நான் வருவதாக, வாழ்த்துக்கள் வருகிறது. நான் யாருக்கும் ரிப்ளை பண்ணல. என்னிடம் அவர்களாகவே வந்து கேட்டாலும், நான் பிக்பாஸ் போக மாட்டேன். 

அங்கே போய் நான் என்ன செய்யப்போகிறேன்? நான் நானா இருக்க விரும்புறேன். நீங்க கொடுக்குற ஸ்கிரிப்டை நடிக்கிறதுக்கு, ஒரிஜினல் ஸ்கிரிப்டுக்கு சினிமாவில் நடித்து விடலாம். இயக்குனர் சொல்லும் கதையில் நடித்து விடலாம். 100 நாள் அங்கே போய் உட்கார்ந்து நடிக்க விருப்பமில்லை, என்னை யாரும் அழைக்கவும் இல்லை. ரேகா வாயை திறந்தாலே கன்டண்ட். அப்புறம் எதுக்கு பிக்பாஸ் போய் தனியா கன்டண்ட் ஆகனும்?

நான் ஏதாவது காதல் கவிதையோ, காம கவிதையோ எழுதினால், எப்போதும் இப்படியே தான் இருப்பியா? என்று கேட்கிறார்கள். யாராவது ரேகா நாயர் என்று எழுதினால், ‘எப்போதும் ஜாதி பெயர் உடன் தான் இருப்பியா?’ என்று கேட்கிறார்கள். யாரோ ஒருவர் என் பெயருக்கு பின்னால் வைத்த பெயருக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்? காலையில் கோயிலுக்கு போய்விட்டு வந்து, மதியம் அசைவம் சமைத்தால் அதையும் கேள்வி எழுப்புகிறார்கள். கோயிலுக்கு போய்டு வந்து பிரியாணி சாப்பிட வேண்டும் என்றால் நான் சாப்பிடுவேன். அது என் விருப்பம். என்னுடைய வயிறு வேறு, என்னுடைய மனசு வேறு. என்னுடைய மனதில் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை. 

நான் இன்று பலருக்கு தன்னம்பிக்கை தந்து கொண்டிருக்கிறேன். ஆனால், நானே பலமுறை உடைந்து போயிருக்கிறேன். ‘ச்சே… என்னடா இந்த வாழ்க்கை’ என்று நினைத்திருக்கிறேன். 3 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். அதுக்கு அப்புறம் தான் என்னுடைய வாழ்க்கை மாற்றம் ஏற்பட்டது. நான் ஐஏஎஸ் ஆக முயற்சி பண்ணேன். என்னுடைய சான்றிதழ்கள் கிழிக்கப்பட்டது. என்னை முன்னேற விடாமல் தடுத்த அவர்களை விட்டு விலகி, நான் படிப்பில் முன்னேற தொடங்கினேன். சாவது ரொம்ப ஈஸி. எளிதில் இறந்துவிடலாம். வாழ்வது ரொம்ப சவால். அதை எதிர்கொள்வதில் தான் சுவாரஸ்யம் இருக்கிறது. 

ஏதாவது ஒரு இடத்தில் நாம் காணாமல் போனால், உடைந்து போனால் தான் நாம் மேலே வர முடியும். நம்மைப் பற்றி எவ்வளவு கேவலமாக பேசினாலும், நம் காது கேட்காது என்று கடந்து செல்ல வேண்டும். நான் ரொம்ப ரொமான்டிக் ஆளு. கணவருக்கு காபி கொடுத்து, காலை தொட்டு வணங்கி , கிச்சனில் ரொமான்ஸ் பண்ணி சமைத்து, ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட்டு சாப்பிட்டு, அரைகுறை ஆடையோடு சாப்பிட்டு வாழ வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவள் நான். ஆனால் சமூகம் எனக்கு என்ன கொடுக்கிறதோ, அதையே நான் திருப்பி கொடுக்கிறேன். நான் 7-வது படிக்கும் போது ரமேஷ் என்கிற சக மாணவன், ஒரு பாக்கெட் ஆசை மிட்டாயை கொடுத்துவிட்டு, ‘ஐ லவ் யூ’ என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான். எனக்கு அதுக்கு அர்த்தமே தெரியவில்லை. ஆனாலும் எனக்கு உச்சம் தலையில் கோபம் ஏறி, ஒரு நாள் அவனை என் செருப்பை எடுத்து அடித்துவிட்டேன். 

அப்பா, அம்மாவோடு வந்து என் அப்பாவிடம் அவன் முறையிட்டான். அப்போதும் நான் எகிறினேன். நான் முதன் முதலில் அடித்தவன் அவன் தான். என்னை உனக்கு பிடிச்சிருக்கா? என்னிடமே கேளு. என் கூட ஒரு நாள் இருக்கனுமா? என்னிடம் கேளுங்கள்! எதுக்கு யாரோ ஒருவர் மூலமா கேக்குறீங்க? ஏதோ ஒரு மேனேஜர் வைத்து எதுக்கு பேச வேண்டும்? யாரிடமோ சொல்லி என்னிடம் வந்தால் எனக்கு கோபம் வரும்’’ என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Chella

Next Post

கொட்ட போகுது கனமழை..!! எந்த மாவட்டங்களில் தெரியுமா..!! வானிலை மையம் கொடுத்த வார்னிங்..!!

Fri Jun 30 , 2023
தமிழ்நாட்டில் வரும் நாட்களில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய வெயில், இம்மாத தொடக்கம் வரையிலும் கூட நீட்டித்தது. இந்த மாதம் முதல் இரண்டு நாட்களில் பல முறை வெப்பம் 100 டிகிரியை தாண்டியிருந்தது. அதன் பின்னர் சட்டென மாறிய வானிலையால் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. குறிப்பாகத் தலைநகர் சென்னை உள்ளிட்ட […]

You May Like