fbpx

’உங்கள நம்புனதுக்கு நல்லா பண்ணிட்டீங்க..!! சொந்த படத்தால் சூனியம் வைத்துக் கொண்ட உதயநிதி..!!

மற்றப்படங்களை கலாய்த்து வந்த உதயநிதி, தன்னுடைய படமான ’கலகத்தலைவன்’ படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக பெரிய அடியை சந்தித்துள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் என்ற பொறுப்பை தாண்டி தற்போது விநியோகஸ்தராக கொடிக்கட்டி பறந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். மாமன்னன் படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்று கூறியிருந்த உதயநிதி, தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் பல படங்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டு உதயநிதி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தினை பெற்று வருகிறார்.

’உங்கள நம்புனதுக்கு நல்லா பண்ணிட்டீங்க..!! சொந்த படத்தால் சூனியம் வைத்துக் கொண்ட உதயநிதி..!!

’கலகத்தலைவன்’ படத்தின் பிரமோஷனில் பல படங்கள் தோல்வி அடைந்ததையும் சில நடிகர்களின் படத்தை கலாய்த்து பேசியும் வந்தார் உதயநிதி. அப்படி வசூல் ரீதியாகவும் கதை ரீதியாகவும் மற்றப்படங்களை கலாய்த்து வந்த ’கலகத்தலைவன்’ படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக பெரிய அடியை சந்தித்துள்ளது. உதயநிதி வெளியிட்ட ’லவ் டுடே’ படம் 65 கோடிக்கும் மேல் வசூலித்து தற்போது தெலுங்கு மொழியிலும் வெளியாகவுள்ளது. ஆனால், கலகத்தலைவன் இதுவரை ரூ.5 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறதாம். சொந்த செலவுக்கே இப்படி ஆகிவிட்டதே என்று உதயநிதி சற்று வருத்தத்திலும் இருக்கிறாராம்.

Chella

Next Post

கணவனை இழந்த பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன்..!! தமிழக அரசு அதிரடி..!!

Wed Nov 23 , 2022
பெண்கள் சுயதொழில் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள கூட்டுறவு வங்கிகளில் 5% வட்டியில் விரைந்து கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 5 சதவீதம் வட்டியில் விரைந்து கடன்களை வழங்க வேண்டும் என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டி என்பதோடு அதிக கெடுபிடிகள் இல்லாததால் பலரும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குகின்றனர். தொடக்க வேளாண் […]

You May Like