வேட்புமனு தாக்கலின் போது பாஜக-அதிமுக இடையே மோதல்..! ஓட ஓட விரட்டியடித்த காவல்துறை..! அண்ணாமலை தர்ணா..!

நீலகிரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று வந்தார். வேட்புமனு தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலத்திற்கு பேரணியாக செல்ல பாஜகவினர் திட்டமிட்டு கூடிருந்தனர். அதைப்போல அதே நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லோகேஷ் தமிழ்ச்செல்வனும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்றிருந்தனர்.

காலை 11 முதல் 12 மணிவரை அதிமுக வேட்புமனு தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிமுக வர கால தாமதம் ஆனது. பஜகவுகுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தில் அதிமுகவும் பாஜகவும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்கு வந்தனர். இரு கட்சி வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது, வெளியில் காத்திருந்த அதிமுகலாவினருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் உண்டானது. ஒரு கட்டத்தில் பஜகவின் பிரச்சார வாகன ஓட்டுனரை அதிமுகவினர் தாக்கியதாக கூறப்படுகிறது. மோதல் உச்ச்க்கட்டத்திற்கு சென்றபோது காவல்துறை சார்பில் தடியடி நடத்தினர். ஆண்கள் பெண்கள் என கண்ணில் பட்டவர்களை எல்லாம் போலீசார் விரட்டியடித்தனர்.

தடியடியை எதிர்த்து இரு கட்சியினரும் காவல்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர். அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்களை அகற்ற காவல்துறையினர் தடியடி நடத்தினர் இதில் பலருக்கும் அதிக காயங்கள் ஏற்பட்டது. ஒரு கட்டத்த்தில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவல்துறையினரின் தடியடியை எதிர்த்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் நீலகிரி எஸ்.பியை பணியிடைநீக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என அண்ணாமலை அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பதற்றம் அதிகரித்தது.

இதனையடுத்து மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருத்தம் தெரிவித்ததை அடுத்து பஜகவினர் களைந்து சென்றனர். பிறகு அதிமுகவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

பின்னர் தடியடியில் தாக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த, அண்ணாமலை, போலிஸாரின் பேச்சை மதித்து தர்ணாவை கைவிட்டாலும் நீலகிரி மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னையில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Also Read: பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,500ஆக உயர்த்தி தரப்படும்..!! அண்ணாமலை அறிவிப்பு..!!

Kathir

Next Post

மக்களே..!! இந்த மாத்திரையை மட்டும் அதிகம் சாப்பிடாதீங்க..!! மரணம் நிச்சயம்..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

Tue Mar 26 , 2024
நம் வீட்டில் அவசர காலத்திற்கென்று சில மாத்திரைகளை முன்பே வாங்கி வைப்பதுண்டு. தலைவலி, சளி போன்ற சின்னச் சின்ன பிரச்சனைகளை குணப்படுத்த பேராசிட்டமால், மெப்தால் போன்ற மாத்திரைகளை பயன்படுத்துவதுண்டு. எனினும் மாத்திரைகளை பயன்படுத்தும்போது கண்டிப்பாக மருத்துவரின் பரிந்துரையின்பேரிலேயே உபயோகப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த வகையில், ப்ரீகாபலின் மாத்திரை (Pregabalin Tablet) வலிப்பு நோய், நரம்பு வலி மற்றும் பதற்றம் ஆகியவற்றை சரிசெய்ய பயன்படுகிறது. ஆனால், இந்த மாத்திரையை அதிகளவில் […]

You May Like