சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலினை அவரின் சகோதரர் மு.க அழகிரி சந்தித்து நலம் விசாரித்தார்..
தலைசுற்றல் காரணமாக முதல்வர் ஸ்டாலின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.. அப்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.. முதல்வரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.. அடுத்த 3 நாட்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.. இதனால் அவர் 2-வது நாளாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சூழலில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று காலை தேனாம்பேட்டை அப்போல்லோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது.. இந்த பரிசோதனைகளுக்கு பின்னர் மீண்டும் கிரீம்ஸ் சாலையில் அப்போல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் கார் மூலம் வந்தார். தொடர்ந்து அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்..
இதனிடையே முதல்வரும், முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ முதல்வர் நலமாக இருக்கிறார்.. இன்று காலை சில பரிசோதனைகளை எடுக்கச்சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.. அதன்படி அந்த பரிசோதனைகள் செய்யப்பட்டது.. அவரின் உடல் நலம் குறித்து மருத்துவர்கள் அறிக்கை வெளியிடுவார்கள். முதல்வர் நன்றாக இருக்கிறார்.. 3 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.. முதல்வர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்.. ” என்று தெரிவித்தார்..
இந்த நிலையில் சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலினை அவரின் சகோதரர் மு.க அழகிரி சந்தித்து நலம் விசாரித்தார்.. அவருடன் மு.க தமிழரசும் அவருடன் வந்துள்ளார்.. அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் அவர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.. நேற்று முதல் மூத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், குடும்பத்தினர் என பலரும் முதலமைச்சரை சந்தித்து வருகை தருகின்றனர்..
முதல்வர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதால், அவரின் அறை முன்பு வரை மட்டுமே அனுமதிக்கபடுகின்றனர்.. அவரை நேரில் சந்திக்க அனுமதி இல்லை என்றே கூறப்படுகிறது..
Read More : முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை எப்படி இருக்கு? உதயநிதி முக்கிய தகவல்..