கல்லூரிகள் இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு…! யுஜிசி அதிரடி உத்தரவு…!

college 5g mobile 2025

கல்லூரிகள் இணையக் குற்றங்கள் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பாக, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.


சைபர் விழிப்புணர்வு, டிஜிட்டல் பாதுகாப்பு, பொறுப்பான ஆன்லைன் நடத்தை மற்றும் தரவு தனியுரிமை குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இந்த பரிந்துரைகளுக்கு ஏற்ப, 2024 நவம்பர் 6-ம் தேதி, யு.ஜி.சி. “உயர் கல்வி நிறுவனங்களுக்கான சைபர் ஹைஜீன் அடிப்படை வழிகாட்டியை வெளியிட்டது. எனவே, உயர்கல்வி நிறுவனங்கள், உரிய வழிகாட்டுதலை பின்பற்றி, மாணவர்களுக்கு சைபர் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பல்கலைக்கழக மானியக் குழு செயலர் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; நாடாளுமன்றத்தில் நிலைக்குழு தனது 254-ம் அறிக்கையில், உயர்கல்வி நிறுவனங்களில், தொழில்நுட்பம் அல்லாத பாடத் திட்டங்களிலும்,சைபர் பாதுகாப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக, இணைய குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, டிஜிட்டல் பாதுகாப்பு, பொறுப்பான ஆன்லைன் நடத்தை மற்றும் தரவு தனியுரிமை குறித்த அடிப்படை அம்சங்களை பயிற்றுவிக்க அறிவுத்தப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைகளுக்கு ஏற்ப உரிய வழிகாட்டுதல்படி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இணையக் குற்றங்கள் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பாக கல்லூரிகள் விழிப்புணர்வுஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

குத்தகைதாரர் விட்டுப் போன மின் பாக்கியை உரிமையாளர்தான் செலுத்த வேண்டும்!. தமிழ்நாடு மின் புகார் அதிகாரி உத்தரவு!

Mon Sep 15 , 2025
வாடகையாளர் கட்டாத மின் கட்டண பாக்கி தொகையான ரூ.6,63,949ஐ கட்டிட உரிமையாளர் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின் புகார் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, வாடகையாளர் காலி செய்திருந்தாலும், மின் பாக்கிய உரிமையாளர் தான் செலுத்தவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பி.கண்ணன் என்பவர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார், அவர் தனது முன்னாள் குத்தகைதாரரான பாரதி பேப்பர் புராடக்ட்ஸ் பயன்படுத்திய மின் நுகர்வுக்கான கட்டணத்தை தான் செலுத்த […]
Electricity EB Bill 2025

You May Like