திரையில் வெற்றிகரமான உச்ச நடிகராக வலம் வந்த விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.. ஆரம்பம் முதலே விஜய் மீது வைக்கப்படும் விமர்சனம் அவர் மக்களை நேரடியாக சந்திக்காது தான்.. ஆனால் மக்களை சந்திக்க பயணம் மேற்கொண்ட போது தான் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர்.. இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.
ஆனால் இந்த சம்பவத்திற்கு விஜய் பொறுப்பேற்காதது, பழி போடும் அரசியல் செய்வது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.. ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல், பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து பேசுவது, கரூர் சம்பவத்தில் மக்களை சந்திக்காமல் ஓடியது, தனது தொண்டர்களை ( ரசிகர்களை) கட்டுப்படுத்தாதது என விஜய் மீது பல விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.. இந்த விமர்சனங்கள் கண்டுகொள்வதாக தெரியவில்லை..
இந்த நிலையில் ஜெயலலிதாவின் தோழியும், வழக்கறிஞருமான கீதா விஜய்யை கடுமையாக சாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.. அதில் பேசிய அவர் “எந்தவொரு கட்சியாக இருந்தாலும், கட்சியின் உயர்மட்ட தலைவர்களிடம் ஒரு கொள்கைகள், வரம்பு இல்லை என்றால் அதை அவரின் கட்சி தொண்டர்களிடம் எதிர்பார்க்க முடியாது.. நான் நடிகர் அஜித்தின் ரசிகை இல்லை.. எனக்கு யாரையும் தனிநபர் வழிபாடு செய்வது பிடிக்காது.. நடிகர் அஜித் தனது ரசிகர்கள் தவறு செய்தால் அறிவுரைகளை சொல்கிறார்..
ஆனால் விஜய் ஒரு இடியட், சைக்கோ, உன் உடம்பெல்லாம் திமிரு. கடவுள் உன்னை பிரபலமாக்கிவிட்டார் என்ற திமிர் உனக்கு.. அந்த திமிர் உன் தலையில் ஏறி பைத்தியம் பிடிக்கப்போகுது.. நீ ஒரு கோழை.. உன் ரசிகர்கள் மரத்தில் ஏறுகிறார்கள், கரண்ட் கம்பி மீது ஏறுகிறார்கள்.. அவர்கள் செய்வது தவறு என்று நீ சொல்றியா?
உன்னை விட அஜித் 1000 மடங்கு சிறந்த நபர்.. அழகிலும் சரி.. மனிதத்தன்மையிலும் சரி.. இந்துக்களின் வாக்குகளுக்காக நெற்றி பொட்டு வைத்து டிராமா போடுகிறாயா விஜய். நீயெல்லாம் ஒரு மனிஷனா?
நீங்க எல்லாம் அரக்கர்கள், அயோக்கியர்கள்.. வாடா விஜய்.. உனக்கு தைரியம் இருந்தால் வா. நீயும் நானும் ஒரு 10 நாள் தேர்தல் பிரச்சாரம் செய்யலாம்.. நீ தேர்ந்தெடுக்கும் தொகுதியில் நானும் நிற்கிறேன்.. நான் தோற்றால் கூட எனக்கு கவலையில்லை.. மக்களுக்கு நான் இதை எல்லாம்.. செய்வேன் என்று சொல்வேன்.. என்னை தேர்ந்தெடுத்தால் தேர்ந்தெடுக்கட்டும். ஆனால் தைரியமாக நான் தேர்தல் பிரச்சாரம் செய்வேன்.. எனக்கு ஏசி கார் தேவையில்லை.. உனக்கு தைரியம் இருக்கா? கோழை.. சைக்கோ.. நீயெல்லாம் நாட்டிற்கு ஒரு கேடு.. எதற்கு உன்னை உன் பெற்றோர் பெற்றார்களோ தெரியவில்லை.. நீ நீயெல்லாம் ஒரு சைக்கோ பிசாசு..
ஸ்டாலின் ஊழல் பற்றி பேச உனக்கு உரிமை உள்ளது.. ஆனால் சி.எம். அவர்களே நான் இங்கே தான் இருக்கிறேன்.. என என்ன பேசுறீங்க.. ஆனால் அன்று அங்கு போய் நின்றிருக்க வேண்டியது தானே? எங்க போன? கரூரில் காயமடைந்தவர்களை சென்று பார்த்திருக்க வேண்டியது தானே.. நீ எல்லாம் எதற்கு அரசியல் பேசுற? உன்னை அரசியலுக்கு வர சொல்லியது யார் கெஞ்சியது? நீ இல்லை என்றால் நாடு குப்பை தொட்டிக்கு போகுமா? கிடையாது.. நீ யாரையும் காப்பாற்றப் போவதில்லை.. உன்னை காப்பாற்றிக் கொண்டால் போதும்..” என்று தெரிவித்தார்..
Read More : திமிங்கலத்தை தட்டி தூக்கும் தவெக.. கலக்கத்தில் ஸ்டாலின்..! தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்..



