சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வரும் பாக்கியம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண், தனது 20 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் வெளியூரில் காவலாளியாக பணிபுரிவதால், வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்ட பாக்கியத்திற்கும், அதே பகுதியைச் சேர்ந்த 50 வயதான தட்சிணாமூர்த்தி என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம், மகளுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட தாய், அவருக்குத் தூக்க மாத்திரைகளை கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார். மகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, தனது கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்தியை வீட்டிற்கு வரவழைத்து மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ய அந்த தாயே உடந்தையாக இருந்துள்ளார். மீண்டும் ஒருமுறை இதேபோன்று நிகழ முயன்றபோது, பாதியிலேயே கண் விழித்த அந்த இளம்பெண், தட்சிணாமூர்த்தியின் கொடூரத்தை கண்டு அதிர்ச்சியடைந்து தாயிடம் முறையிட்டுள்ளார். ஆனால், அந்தப் பெண் மகளை அறையில் பூட்டி வைத்து மிரட்டியுள்ளார்.
அங்கிருந்து தப்பித்து திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சமடைந்த அந்தப் பெண்ணிற்குத் திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனையில் அவர் 7 வார கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததும் இடிந்து போனார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், வடபழனி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, காமக் கொடூரன் தட்சிணாமூர்த்தி மற்றும் அதற்கு துணை நின்ற தாய் பாக்கியம் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Read More : விஜய் போட்ட பிளான் தோல்வி..!! பின்னடைவை சந்திக்கும் தவெக..!! அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!



