தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்..
அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.. மேலும் பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..
இந்த படத்தை கேவிஎன் புரொட்க்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. இந்த அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சமீபத்தில் ஜனநாயகன் படத்தின் போஸ்டர், முதல் சிங்கிள் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது..
கடந்த 27-ம் தேதி ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது.. இந்த படத்தின் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது..
அதன்படி இன்று ஜனநாயகன் படத்தின் ட்ரெயலர் இன்று வெளியாகி உள்ளது.. வழக்கம் போல் ரசிகர்கள் இந்த ட்ரெய்லரை கொண்டாடி வருகின்றனர்.. விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இப்படம் விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
Read More : தலைவர் 173 : கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தின் இயக்குனர் இவர் தான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!



