CM Yogi | “இந்தியாவை இஸ்லாமிய மயமாக்கும் காங்கிரஸ்…” யோகி ஆதித்யநாத் பரபரப்பு குற்றச்சாட்டு.!!

CM Yogi: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் பாண்டிச்சேரி உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 பாராளுமன்ற தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில் கேரளா கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரம் குறித்த சர்ச்சை அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது. ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசிய கருத்துகளுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்(CM Yogi) இஸ்லாமியர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி குறித்து செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பேசிய யோகி ஆதித்யநாத் காங்கிரஸ் கட்சி இந்தியாவை இஸ்லாமிய மயமாக்கும் இழிவான முயற்சியில் ஈடுபடுகிறது என குற்றம் சாட்டி இருக்கிறார். மேலும் இது தொடர்பாக பேசிய அவர் கடந்த யுபிஏ கூட்டணியின் ஆட்சியிலும் இது போன்ற முயற்சிகள் நடைபெற்றதாக தெரிவித்தார்.

அந்த நேரத்திலும் பாஜக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது. எனவே, நீதிபதி வர்மா கமிட்டி அறிக்கையாக இருந்தாலும் சரி, சச்சார் கமிட்டி அறிக்கையாக இருந்தாலும் சரி – இவை அனைத்தும் ஓபிசி, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை கொள்ளையடிக்க காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என குற்றம் சாட்டினார். இது தொடர்பான விவகாரங்களில் மோடி நாட்டு மக்களின் கவனத்தை இருத்திருப்பதாக யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டு இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு 32 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவோம் என தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் எண்ணம் நல்லதல்ல. இப்போதுதான் ஒவ்வொரு உண்மையாக வெளி வருகிறது. நாட்டு மக்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Read More: பெல்ட் அணிவதால் இவ்வளவு பிரச்சனைகளா..? இனிமேல் ஜாக்கிரதையா இருங்க..!!

Next Post

"உலகில் 28 கோடி பேர் பட்டினியால் தவிப்பு" ; ஐ.நா அதிர்ச்சி தகவல்!

Thu Apr 25 , 2024
உலகம் முழுவதும் கடந்த ஆண்டில் மட்டும் 28 கோடி பேர் பட்டினியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் உணவு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் பட்டினியால் வாடி வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த ஆண்டில் (2023) 28 கோடி பேர் கடுமையான பட்டினியை எதிர்கொண்டனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-“2023 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் […]

You May Like