சென்னையில் பரபரப்பு…! போக்குவரத்து காவலரை தாக்கிய காங்கிரஸ் கட்சி MLA…!

mla 2025

மயிலாடுதுறை காங்கிரஸ் MLA ராஜ்குமார் சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து காவலரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் பிளாசா அருகில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமாரின் கார் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்கும்படி, போக்குவரத்து காவலர் பிரபாகரன் கூறியுள்ளார். போக்குவரத்து காவலர் பிரபாகரனுடன் எம்எல்ஏ ராஜ்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, போக்குவரத்து காவலர் பிரபாகரனை எம்எல்ஏ ராஜ்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. என் காரை எடுக்க முடியாது, இங்கு தான் நிற்கும் என எம்.எல்.ஏ ராஜ்குமார் கோபமாக விட்டுச் சென்றுள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்க மறுத்ததால் காரின் சக்கரங்களை பூட்டி ரசீது கொடுத்த போக்குவரத்து காவலருடன் எம்எல்ஏ ராஜ்குமாா், அவரது ஆதரவாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. போக்குவரத்து காவலா் பிரபாகரனை அடித்த எம்எல்ஏ ராஜகுமாா் என் காரை எடுக்க முடியாது இங்கு தான் நிற்கும் என விட்டுச்சென்றாா். தகவல் அறிந்து வந்த அண்ணாசாலை போலீசாா் காவல் உயரதிகாாிகளுக்கு தகவல் தெரிவித்ததை எடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Vignesh

Next Post

பாமகவின் சட்டப்பேரவை குழுத் தலைவர் இவர் தான்...! அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை...!

Sun Oct 19 , 2025
தமிழக சட்டப்பேரவை மரபுகளை பேரவைத் தலைவர் மதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்; பாமகவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதற்காக சேலம் மேற்கு எம்எல்ஏ இரா.அருள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய கொறடாவாக மயிலம் எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்பட்டு 108 நாட்கள் ஆகின்றன. அதேபோல், பேரவைக் குழுத் தலைவராக ஜி.கே.மணி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன், துணைத் தலைவராக மேட்டூர் […]
anbumani 2025

You May Like