திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதி. ரத்த அழுத்தம் குறைந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2018 ல் சமக்ர சிக்க்ஷா அபியான் என்ற ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில் பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டமும் சேர்க்கப்பட்டது. இந்த திட்டத்தில் தமிழகம் இணையாதால் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கு என வர வேண்டிய தொகையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு திமுக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழக மாணவர்களுக்கான இந்த கல்வி உதவித்தொகையை ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். திருவளளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு பார்வையாளர் கூட்ட அரங்கில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதி. ரத்த அழுத்தம் குறைந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.