விஜய்யிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என அவரின் மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார்.. விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும் சங்கீதா குற்றம்சாட்டியிருந்தார்.. மேலும் “ அந்த நடிகை எனது கணவருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்..
அது எனது பிள்ளைகளுக்கும், குடும்பத்திற்கும் அவமானத்தை கொடுத்தது.. நன்மதிப்பு கருதி அந்த நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை.. எனது கணவரின் மூலம் நெருக்கடி வந்தால் அந்த நடிகையின் பெயரையும் சொல்வேன்.. அவரை 2-வது எதிர் மனு தாரராக சேர்ப்பேன்..” என்று குறிப்பிட்டிருந்தார்..
மேலும் விவாகரத்து வழக்கு முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க விஜய் அனுமதிக்க வேண்டும் என்றும் தனக்கும் பிள்ளைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் புதிய மனு ஒன்றையும் சங்கீதா தாக்கல் செய்திருந்தார்..
விஜய்யும் த்ரிஷாவும் கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங்கில் இருப்பதாக அரசல் புரசலாக தகவல் வந்த வண்ணம் இருந்தது.. இந்த சூழலில் சங்கீதாவின் இந்த குற்றச்சாட்டு மூலம் அந்த நடிகை த்ரிஷா என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது..
இந்த பரபரப்பு அடங்குவதற்குள். விஜய்யும், த்ரிஷாவும் ஒரே நிற ஆடையில் ஒன்றாக, கல்பாத்தி அகோரம் மகன் திருமணத்திற்கு நேற்று முன் தினம் வந்தார்.. மேடைக்கு ஒன்றாக சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு, போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு ஒன்றாகவே புறப்பட்டனர்.. இந்த சம்பவம் தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக் ஆக மாறி உள்ளது.
விஜய் என்ன செய்தாலும், அவருக்கு சப்போர்ட் செய்து வந்த விஜய்யின் ரசிகர்கள் இந்த விஷயத்தில் விஜய்யை விமர்சித்து வருகின்றனர்.. விஜய்யின் கட்சி தொண்டர்களோ, கட்சியை விட்டு விலகுவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்..
இந்த நிலையில் விஜய் குறித்த கேள்விகளுக்கு த்ரிஷா பதிலளிக்க மறுத்துவிட்டார்.. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் த்ரிஷாவிடம் விஜய் உடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு எந்த பதிலையும் அளிக்காமல் த்ரிஷா புறப்பட்டு சென்றார்..
Read More : ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையை அறிவித்த மற்றொரு பிரபல நிறுவனம்..! எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி..!



