பள்ளி மாணவிகள் கர்ப்பமானால் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற ரஷ்ய அரசின் அறிவிப்பு உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
ஒரு நாட்டின் எதிர்காலம் அதன் இளைய தலைமுறையிடம் உள்ளது. அவர்களிடம் பள்ளிக்கல்வி, உயர் கல்வி, திறன் வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டும். அவர்களது பாதுகாப்பையும், சிந்தனையையும் மேம்படுத்த வேண்டும். ஆனால் ரஷ்ய நாட்டின் புதிய அறிவிப்பு உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, பள்ளி மாணவிகள் கர்ப்பமானால் அவர்களுக்கு ரூ.1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகை நிதியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, வளர்ந்து வரும் இளைய தலைமுறைக்கு தவறான வழிகாட்டி என சமூக ஆர்வலகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதாவது, “கல்வி படிக்க வேண்டியது முக்கியம்” என்பதற்குப் பதிலாக, “கர்ப்பமானால் அரசு பணம் தரும்” என்ற எண்ணம் மாணவிகளில் உருவாகும் அபாயம் உள்ளது. இது போல பண ஊக்கங்கள், சமுதாயத்தில் தவறான நம்பிக்கைகள், தவறான பார்வைகள் உருவாக வழிவகுக்கும் என பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக ரஷ்யா கர்ப்பிணி பெண்களுக்கு பணம் வழங்கும் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தால் பெரியவர்கள் மட்டுமே பயன் அடைந்ததால் தற்போது பள்ளி மாணவிகளுக்கும் புதிய கொள்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. 43 சதவீதம் பேர் ரஷ்யாவின் புதிய கொள்கையை ஆதரித்துள்ளனர். 40% பேர் எதிர்த்துள்ளனர். போரில் 2,50,000 ரஷ்ய வீரர்கள் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இளம் ரஷியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் மக்கள் தொகை கணிசமாக குறைந்து வருகிறது. மக்கள் தொகையை பெருக்குவதை நோக்கமாக கொண்ட ரஷ்ய அரசு பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இங்கு கருக்கலைப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
Read more: விவசாயிகளுக்கு ரூ.10,000 மானியம்… தமிழக அரசின் சூப்பர் திட்டம்…! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…?