ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான கூலி படம் வரும் 14-ம் தேதி வெளியாக உள்ளது.. இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.. சமீபத்தில் கூலி படத்தின் ட்ரெயலரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.. இந்த நிலையில் கூலி படத்தின் காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளன.. இந்த புதிய போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறி உள்ளன.. பல ஹாலிவுட் படங்களில் இருந்து போஸ்டர்கள் காப்பி செய்யப்பட்டுள்ளதாக பல பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்… மேடம் வெப், கிளாஸ் மற்றும் ரெபெல் மூன் ஆகியவற்றின் போஸ்டர்களை பதிவிட்டு வருகின்றனர்..
அந்தக் கருத்து, “அடிப்படையில், கூலி குழு சமீபத்தில் வெளியிட்ட 4 போஸ்டர்களில் 3 வேறு எங்கிருந்தோ நகலெடுக்கப்பட்டவை. GP போன்ற ஒருவர் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட Beast படத்தின் போஸ்டரைக் கூட நகலெடுத்ததை நம்பவே முடியவில்லை. GP போஸ்டர் வடிவமைப்பிற்காக தயாரிப்பாளர்களிடமிருந்து பெரும் தொகையைப் பெறுகிறார், இதைத்தான் அவர் செய்கிறார்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
மற்றொரு பயனர், “ பாடல் காப்பியடிக்கப்பட்டது., முதல் போஸ்டரும் காப்பி அடிக்கப்பட்டது. இப்போது இந்த போஸ்டரும் கூட, ஆனால் சில சினிமா ஆர்வலர்கள் இன்னும் கூலியின் பெயரில் ஏமாற்றப்படுவார்கள். காப்பி+ பேஸ்ட், ஜீரோ அசல் தன்மை.” மற்றொரு பயனர் தயாரிப்பாளர்களை “வழக்கமான காப்பி” என்று குறிப்பிட்டார்.
இசையமைப்பாளர் இளையராஜா கடந்த ஆண்டு மே மாதம் தங்க மகன் படத்தின் தனது டிஸ்கோ டிஸ்கோ பாடலை முறையான அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தியதற்காகவும், அதிகாரப்பூர்வ ஒப்புதல் அல்லது நீக்கம் கோரியும் கூலி தயாரிப்பாளருக்கு பதிப்புரிமை அறிவிப்பை அனுப்பிய நிலையில் தற்போது காப்பி சர்ச்சை எழுந்துள்ளது..
லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ படத்தில் தேவாவாக ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்தப் படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், மற்றும் சௌபின் ஷாஹிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் பேனரின் கீழ் கலாநிதி மாறன் இதைத் தயாரிக்கிறார். பாலிவுட் ஸ்டார் ஆமிர் கான் கேமியோ ரோலில் நடித்து வருகிறார்..