மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பச்சிளம் குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் அடுத்தடுத்து பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த இருமல் மருந்தை உட்கொண்ட 25 பிஞ்சு குழந்தைகளின் உயிர்கள் பலியாகியுள்ளன. இந்தத் துயரச் சம்பவத்திற்கு காரணமான மருந்து, ‘கோல்ட்ரிப்’ (Coldrif) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உயிர்க்கொல்லி மருந்தை தயாரித்த ஸ்ரீசன் பார்மா (Srisan Pharma) நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வந்த நிலையில் அந்நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும் அந்நிறுவனத்தின் உரிமையாளரான 75 வயது ரங்கநாதனை சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து காஞ்சிபுரத்தின் சுங்குவார்சத்திரம் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்த.. மருந்து தயாரிக்க ஸ்ரீசன் பார்மா நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட உரிமங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்ட, அந்நிறுவனம் மூடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள மருந்து தயாரிப்பு ஆலைகள் மற்றும் மருந்து நிறுவனங்களில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது..
இந்த நிலையில் இருமல் மருந்து உட்கொண்ட 25 குழந்தைகள் பலியான விவாகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.. இந்த தீர்மானத்திற்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதிலளித்து பேசினார்.. அப்போது “ குழந்தைகள் மரண செய்தி கிடைத்த உடன் 2 நாட்கள் ஆய்வு செய்து அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய Coldrif இருமல் மருந்து மருத்துவமனைகளில் பயன்படுத்தவில்லை.. ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்த இந்த இருமல் மருந்து தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டது..
குழந்தைகள் இறப்பு குறித்து தெரியவந்ததும் மருந்து தயாரிப்பு நிறுத்தப்பட்டு, நிறுவனத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.. மேலும் Coldrif இருமல் மருந்து பறிமுதல் செய்யப்பட்டு நிறுவன உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.. 25 குழந்தைகள் பலியாக காரணமான ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்திற்கு அதிமுக ஆட்சியில் தான் உரிமம் வழங்கப்பட்டது. குழந்தைகள் இறந்த நிலையில் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் அனைத்து மருந்துகளின் விற்பனைக்கும் தடை விதித்தோம். 2021-23-ம் ஆண்டு வரையிலான ஆய்வில் சிறுசிறு குற்றங்களுக்காக ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தண்டிக்கப்பட்டுள்ளது.. தற்போது மருந்து உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தியை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார்.
Read More : தமிழ்நாட்டில் வீடு கட்டுவோருக்கு புது ரூல்ஸ்..!! பார்க்கிங் வசதி இனி கட்டாயம்..!! தமிழ்நாடு அரசு அரசாணை..!!



