தம்பதிகளே..!! நீண்ட நேரம் தாம்பத்தியம் அனுபவிக்க இந்த 5 டிப்ஸை மறக்காம ஃபாலோ பண்ணுங்க..!!

Sex 2025 1

இன்றைய நவீன வாழ்க்கை சூழலில் விவாகரத்துகள் அதிகரிப்பதற்கு தம்பதியிடையே நிலவும் தாம்பத்திய குறைபாடுகளும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக மருத்துவர் செங்கோட்டையன் எச்சரிக்கிறார். முறையான புரிதல் இல்லாமையும், அறிவியல் பூர்வமான அணுகுமுறை இல்லாததுமே தம்பதிகளுக்குள் விரிசலை உண்டாக்குகிறது. அந்த வகையில், தாம்பத்திய உறவை மேம்படுத்தவும், நீண்ட நேர உறவை சாத்தியப்படுத்தவும் அவர் சில முக்கியமான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.


ஆரோக்கியமான தாம்பத்தியம் : தாம்பத்திய நேரம் என்பது நபருக்கு நபர் மாறுபடும் என்றாலும், ஒரு ஆரோக்கியமான இந்திய ஆண் சராசரியாக 40 முதல் 60 ‘ஸ்ட்ரோக்ஸ்’ (Strokes) வரை உறவில் ஈடுபடுவது இயல்பானது என்று அவர் குறிப்பிடுகிறார். இந்த எண்ணிக்கை 40-க்கும் கீழ் மிக குறைவாக இருக்கும் பட்சத்தில், அது விரைந்து விந்து வெளியேறுதல் என்ற குறைபாட்டை குறிக்கலாம். எனவே, இணையதளங்களில் வரும் தவறான அல்லது மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை நம்பி மன உளைச்சலுக்கு ஆளாகாமல், அறிவியல் உண்மைகளைப் புரிந்துகொள்வது அவசியம்.

ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு உச்சக்கட்டத்தை அடைய அதிக நேரம் மற்றும் தூண்டுதல் தேவைப்படுகிறது. எனவே, உடலுறவுக்கு முன்பாக 15 முதல் 30 நிமிடங்கள் வரை முன்கலவி-யில் ஈடுபடுவது தம்பதிகள் இருவருமே ஒரே நேரத்தில் திருப்தி அடைய வழிவகுக்கும். மேலும், ஆண்களின் தாம்பத்தியத் திறனை மேம்படுத்த வயிறு மற்றும் கால் பகுதிகளுக்கான உடற்பயிற்சிகளை தினசரி மேற்கொள்வது அவசியம் என்று மருத்துவர் பரிந்துரைக்கிறார்.

உடல் பலம் தரும் உணவு முறைகள் :

* உடலுறவில் நீண்ட நேரம் ஈடுபடவும், நரம்பு தளர்ச்சியை போக்கவும் நமது பாரம்பரிய உணவு முறைகள் பெரும் உதவியாக இருக்கும்.

* வாரத்திற்கு இருமுறை உளுந்தங்கஞ்சி அல்லது உளுந்தங்கழி சாப்பிடுவது இடுப்பு எலும்பு மற்றும் தசைகளுக்கு வலு சேர்க்கும்.

* பாதாம், காய்ந்த பேரீச்சம்பழம், ஊற வைத்து வேகவைத்த கொண்டைக்கடலை மற்றும் முளைகட்டிய பயிறு வகைகளைத் தவறாமல் சேர்க்க வேண்டும்.

* தினமும் 4 அத்திப்பழங்கள் உட்கொள்வது பாலியல் ஹார்மோன்களைச் சீராக்க உதவும்.

* உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்கப் போதுமான அளவு தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த எளிய மாற்றங்கள் மூலமே தாம்பத்திய வாழ்வை சிறப்பாக்க முடியும். இருப்பினும், தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகள் தீவிரமாக இருந்தால், சுய மருத்துவம் செய்யாமல் தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே குடும்ப மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

Read More : புற்றுநோயின் ஹாட்ஸ்பாட்களாக மாறிய சென்னை, காஞ்சிபுரம், வேலூர்..!! 10 ஆண்டுகளில் இருமடங்கு..!! சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்..!!

CHELLA

Next Post

ஆற்றுப்பகுதியில் ஓரினச்சேர்க்கை..!! திடீரென ஆணுறுப்பை சிதைத்து கொடூர கொலை செய்த நண்பன்..!! திண்டுக்கல்லில் திடுக்கிடும் சம்பவம்..!!

Thu Feb 5 , 2026
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவரின் ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கே. அத்திக்கோம்பை கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் பெருமாள், கடந்த ஜனவரி 30-ஆம் தேதி சம்பளம் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் கவலையடைந்த குடும்பத்தினர் அவரது செல்போனுக்கு அழைத்துள்ளனர். அப்போது மறுமுனையில் பேசிய மர்ம நபர் […]
Crime 2026 4

You May Like