சர்வதேச ‘டி-20’ போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தி உலக சாதனை!. ரஷீத் கான் அசத்தல்!

Rashid Khan Creates History 11zon

சர்வதேச ‘டி-20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் உலக சாதனை படைத்துள்ளார்.


சார்ஜாவில் நேற்று நடந்த முத்தரப்பு ‘டி-20’ தொடரின் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற எமிரேட்ஸ் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு சிதிக்குல்லா அடல் (54), ஜத்ரன் (63), ஓமர்சாய் (20) கைகொடுக்க, 20 ஓவரில் 188/4 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய எமிரேட்ஸ் அணிக்கு வசீம் (67), ராகுல் சோப்ரா (52*) சற்று போராடினர். 20 ஓவரில் 150/8 ரன் மட்டும் எடுத்தது. ஆப்கானிஸ்தான் 38 ரன் வித்தியாசத்தில் வென்றது.

இப்போட்டியில் ‘சுழலில்’ மிரட்டிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான், 3 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச ‘டி-20’ போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இவர், 98 போட்டியில் 165 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அடுத்த இடத்தில் நியூசிலாந்தின் சவுத்தீ (126 போட்டி, 164 விக்., ) உள்ளார். இப்பட்டியலில் அர்ஷ்தீப் சிங் (63 போட்டி, 99 விக்.,) 25வது இடத்தில் உள்ளார். இவர் தான் இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்.

ஆப்கானிஸ்தான் சார்பில் அதிக வீழ்த்தியவர்களில் முதலிடத்தில் ரஷித் கான் (165 விக்கெட்) நீடிக்கிறார். அடுத்த இடத்தில் முகமது நபி (134 போட்டி, 99 விக்கெட்) உள்ளார். ஒட்டுமொத்த ‘டி-20’ அரங்கில் ரஷித் கான் 26, தான் அதிக விக்கெட் வீழ்த்தியுள்ளார். 19 அணிகளுக்காக விளையாடிய இவர், 489 போட்டிகளில் 664 விக்கெட் சாய்த்திருக்கிறார். அடுத்த இடத்தில் வெஸ்ட் இண்டீசின் டுவைன் பிராவோ (582 போட்டி, 631 விக்கெட்) உள்ளார்.

Readmore: இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் ஏன் அதிகரிக்கின்றன?. ஆபத்தில் உள்ள மாநிலம் எது?. ஷாக் ரிப்போர்ட்!

Saranya

Next Post

2000 தொடக்க பால் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை...!

Wed Sep 3 , 2025
தொடக்க பால் கூட்டுறவு சங்க ஊழியர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் திமுக அரசு நடத்துவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற பணியாளர்கள் சுமார் 2,000 பேர் உள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு ஓய்வூதியம் வழங்குவதில்லை. விவசாயிகளிடம் நேரடியாக பால் கொள்முதல் செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்காமல், கொள்முதல் செய்த பாலை, […]
annamalai 2

You May Like