கோவிட் விந்தணுக்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.. குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கலாம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

brain 1

கருவுறுதலுக்கு முன் தந்தைக்கு ஏற்பட்ட கோவிட் ( SARS-CoV-2) தொற்று, அவர்களின் விந்தணுக்களில் (sperm) மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பது ஒரு புதிய விலங்கு ஆய்வில் தெரியவந்துள்ளது. இது, அவர்களின் சந்ததிகளின் மூளை வளர்ச்சி மற்றும் நடத்தை மீது தாக்கத்தை ஏற்படுத்தி, பின்னர் வாழ்க்கையில் அதிகப்படியான கவலை அபாயத்தை (anxiety risk) உருவாக்கக்கூடும். இந்த கண்டுபிடிப்புகள் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) இதழில் வெளியிடப்பட்டுள்ளன.. இந்த ஆய்வு முடிவுகள் எதிர்கால தலைமுறைகளில் கோவிட் தொற்றின் நீண்டகால விளைவுகள் குறித்து புதிய கவலைகளை எழுப்புகின்றன.


ஆண் எலிகளில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை காரணிகள், எடுத்துக்காட்டாக இணைபெருவதற்கு முன் குறைவான உணவு பழக்கம், விந்தணுக்களில் உள்ள தகவல்களை (உதாரணமாக குறிப்பிட்ட RNA மூலக்கூறுகள்) மாற்றி, அவர்களின் சந்ததிகளின் நடத்தை மீது தாக்கம் ஏற்படுத்த முடியும் என்பது முந்தைய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.. இதனை அடிப்படையாகக் கொண்டு, மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் Florey Institute of Neuroscience and Mental Health ஆய்வாளர்கள், COVID தொற்று இதேபோன்ற தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை ஆராய்ந்துள்ளனர்.

ஆய்வில், ஆண் எலிகள் SARS-CoV-2 தொற்றில் இருந்து பல வாரங்கள் மீண்ட பிறகு, ஆரோக்கியமான பெண் எலிகளுடன் இணைக்கப்பட்டன. தொற்றிலிருந்து மீண்ட ஆண் எலிகளின் சந்ததிகள், தொற்றற்ற தந்தைகளின் சந்ததிகளுடன் ஒப்பிடும்போது, அதிகப்படியான கவலைக்குறிய நடத்தை (anxiety-like behaviours) வெளிப்படுத்தின. மேலும், பெண் சந்ததிகளில், மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வுடன் (depression) தொடர்புடைய மூளையின் ஹிப்போகாம்பஸ் (hippocampus) பகுதியில் உள்ள ஜீன் செயல்பாடுகளில் (gene activity) குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காணப்பட்டன.

மேலும் பகுப்பாய்வு, COVID தந்தையின் விந்தணுக்களில் RNA மூலக்கூறுகளை மாற்றியமைத்து, மூளை வளர்ச்சிக்கு முக்கியமான மரபணுக்களை பாதித்தது என்பதைக் காட்டுகிறது.

“இந்த கண்டுபிடிப்புகள் மனிதர்களுக்குப் பொருந்தினால், உலகளவில் மில்லியன் கணக்கான குழந்தைகள் பாதிக்கப்படலாம், பொது சுகாதாரத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தலாம்” என்று முன்னணி ஆராய்ச்சியாளர் பேராசிரியர் அந்தோணி ஹன்னன் கூறினார், அதே நேரத்தில் இந்த நிகழ்வை முழுமையாகப் புரிந்துகொள்ள மேலும் ஆராய்ச்சி தேவை என்பதை வலியுறுத்தினார்.

Read More : ChatGPT-யில் GPT என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? 99% பேருக்கு தெரியாது!

RUPA

Next Post

இந்தியாவில் பிரம்மாண்ட AI மையம்.. அமெரிக்காவுக்கு வெளியே மிகப்பெரிய முதலீடு இதுதான்.. கூகுள் அறிவிப்பு!

Tue Oct 14 , 2025
விசாகப்பட்டினம் துறைமுக நகரத்தில் ஒரு AI மையத்தை நிறுவுவதில் அடுத்த 5 ஆண்டுகளில் 15 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது இந்தியாவில் கூகிளின் மிகப்பெரிய முதலீட்டு உறுதிமொழிகளில் ஒன்றாகும் என்பதை நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். AI மைய உள்கட்டமைப்பு புது டெல்லி நிகழ்வில் பேசிய கூகிள் கிளவுட் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியன், உறுதிப்பாட்டின் அளவை வலியுறுத்தி, நிறுவனம் […]
google ai 625x300

You May Like