Cricket | தரவரிசையில் முதலிடத்தை பிடித்த அஸ்வின்..!! பின்னுக்கு தள்ளப்பட்ட விராட்..!! நடுவில் புகுந்த ரோகித்..!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சிறந்த வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி மற்றும் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐ.சி.சி. சிறந்த வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்தை சேர்ந்த வில்லியம்சன் முதலிடத்திலும், இங்கிலாந்தை சேர்ந்த ஜோ ரூட் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் சுமித் 2 இடங்கள் சரிந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்திய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்திய வீரரான விராட் கோலியை முந்தினார். இதன் மூலம் அவர் 6-வது இடத்தை பிடித்துள்ளார். மேலும், ஜெய்ஸ்வாலும் இரண்டு இடங்கள் முன்னேறி கோலியை தாண்டி 8-வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் விராட் கோலி 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் பும்ரா மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளார்.

இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வின் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹேசில்வுட் இரண்டாவது இடத்திலும், மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா 7-வது இடத்தில் உள்ளனர். டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் 2-வது இடத்திலும் உள்ளனர்.

Read More : Congress | பெண்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! ஆண்டுக்கு ரூ.1 லட்சம்..!! காங்கிரஸ் கட்சியின் 5 முக்கிய வாக்குறுதிகள்..!!

Chella

Next Post

HARIYANA | நம்பிக்கை வாக்கெடுப்பில் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசு வெற்றி.!

Wed Mar 13 , 2024
ஹரியானா மாநிலத்தின் புதிய முதல்வர் நயாப் சிங் சைனி புதன்கிழமை மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெற்றார். முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது கேபினட் அமைச்சர்களுடன் நேற்று ராஜினாமா செய்ததை தொடர்ந்து நயாப் சிங் சைனி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஹரியானா மாநில சட்டப்பேரவையில் இரண்டு மணி நேரம் விவாதம் நடந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஜனநாயக ஜனதா கட்சி தனது 10 […]

You May Like