உலகக்கோப்பை கிரிக்கெட்..!! ஆக.25 முதல் டிக்கெட் விற்பனை..!! சென்னையில் எப்போது..? ஐசிசி முக்கிய அறிவிப்பு..!!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் அக்.5ஆம் தேதி முதல் நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான போட்டி அட்டவணை மாற்றியமைக்கப்பட்டு ஐசிசி வெளியிட்டுள்ள நிலையில், டிக்கெட் விற்பனைக்கான தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, https://www.icc-cricket.com என்ற இணையதளத்தில் அக்டோபர் 15ஆம் தேதி முதல் டிக்கெட் வாங்குவதற்கான பதிவு தொடங்குகிறது.

அக்டோபர் 25ஆம் தேதி முதல் பதிவு செய்தவர்களுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் என அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 25ஆம் தேதி இந்தியா பங்கேற்காத மற்ற அணிகளுக்கான பயிற்சி போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெறும் என்றும் இந்தியா விளையாடும் 2 பயிற்சி போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதேபோல் இந்தியா-ஆப்கானிஸ்தான் மோதும் போட்டி மற்றும் இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து, இந்தியா – நியூசிலாந்து, இந்தியா – இலங்கை அணிகளுக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும். அக்டோபர் 14ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெறும். இந்தியா – தென் ஆப்பிரிக்கா, இந்தியா – நெதர்லாந்து மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கும். அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

சித்தியுடன் கள்ள உறவு..!! கடுப்பான அத்தை..!! தடையாக இருந்ததால் குத்திக் கொலை..!! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

Thu Aug 10 , 2023
சென்னை கொளத்தூரில் உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் கணேஷ் (31). இவர், பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர், தனது சித்தியுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு அவருடனே வசித்து வந்துள்ளார். இதனையறிந்த அவரது அத்தை குணசுந்தரி இதுகுறித்து தட்டிக்கேட்டதால், கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், கடனாக கொடுத்த பணத்தையும் திருப்பி கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதனால், சித்தியுடனான கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த அத்தையை கொலை செய்ய திட்டமிட்டாார். அதன்படி, […]

You May Like