போர்ச்சுகல் கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்டநாள் காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடனான உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். ரசிகர்களை பிரமிக்கவைக்கும் வகையில், அவர் ஜார்ஜினாவுக்கு ஒரு அற்புதமான வைர மோதிரத்தை பரிசாக வழங்கி, நிச்சயதார்த்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மைதானத்திலும், வெளியேயும் தனது திறமைக்கு பெயர் பெற்ற ரொனால்டோ, தனது காதலிக்கு பரிசளித்த வைர மோதிரம் சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. மாடலும் செல்வாக்கு மிக்கவருமான ஜார்ஜினா, அந்த பிரமாண்ட மோதிரத்தை தனது இடது கையில் அணிந்தபடி, ரொனால்டோவின் கையில் கைபிடித்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
“ஆம்… என் வாழ்நாள் முழுவதும்” என்று ஸ்பானிஷ் மொழியில் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த ஜார்ஜினா, தனது மகிழ்ச்சியை உலகுடன் பகிர்ந்து கொண்டார் ஜார்ஜியானாவும், ரொனால்டோவும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஸ்பெயினில் சந்தித்தனர். அப்போது கூக்கி நிறுவன கடையில் விற்பனையாளராக ஜார்ஜியானா இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது.
இந்த நட்பு 2017 ஆம் ஆண்டு காதலாக மாறியது. அதன் பின், இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு அலானா மாட்டினா, பெல்லா என்ற பெண் குழந்தை பிறந்தது. மேலும் ரொனால்டோவின் முதல் திருமணத்தில் பிறந்த மூன்று குழந்தைகளையும் ஜார்ஜியானா வளர்த்து வருகிறார். இவர்களின் நிச்சயதார்த்த அறிவிப்பு புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.
இந்த நிலையில் வைர நிபுணர் ஜூலியா, ஜார்ஜினா ரோட்ரிக்ஸின் நிச்சயதார்த்த மோதிரத்தைப் பற்றி அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார். ஜூலியாவின் மதிப்பீட்டுப்படி, மோதிரத்தின் மையக் கல் 35 காரட் D-ஃப்ளாலெஸ் ஓவல் வைரம். நிறமற்ற, குறைபாடில்லாத, உலகின் உயர்ந்த தர வைரங்களில் ஒன்றாகும். இதன் அளவு, தெளிவு மற்றும் ஆடம்பரமான பக்கக் கற்கள் காரணமாக, இதன் விலை $3 மில்லியன் (சுமார் ₹25 கோடி) என அவர் கூறினார்.
Read more: அசிங்க அசிங்கமா பேசுனாரு..!! கமல் இப்படி பண்ணுவாருன்னு நினைக்கல..!! ஓபனாக பேசிய நடிகை அம்பிகா..!!