கடலூரில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது இடி, மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழை சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. இதே போல் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது..
இந்த நிலையில் இன்று காலை முதலே கடலூரில் கனமழை கொட்டி தீர்த்து வந்தது.. கடலூரில் உள்ள கழுதூர் என்ற கிராமத்தில் 4 பெண்கள் விவசாய வேலைக்காக வயலுக்கு சென்றனர்.. வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது இடி, மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.. மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் இடி மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Read More : கரூர் துயரம்.. பிரேத பரிசோதனை மேஜை… இத்தனை குழப்பம் ஏன்? அண்ணாமலை கேள்வி..



