தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ தொலைவிலும் உள்ளது.. வட- வடமேற்கில் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. இந்த புயல் நாளை அதிகாலையில் தமிழ்நாட்டை நோக்கி வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.. இது வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த புயல் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..
அதே போல் நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர் விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..
இன்று டெல்டா மற்றும் அதை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதர கடலோர மாவட்டங்களில் அதிகபட்சமாக 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..
Read More : தங்கம் விலை தடாலடி சரிவு..!! இனிமே இப்படித்தான் இருக்குமாம்..!! குஷியில் நகைப்பிரியர்கள்..!!



