உஷார்..! வங்கக்கடலில் உருவாகும் மோன்தா புயல் தீவிர புயலாக மாறும்! சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

heavy rain 2

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. இது தொடர்ந்து மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் வங்கக்கடலில் நாளை  மறுநாள் உருவாகும் மோன்தா புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கோவை, நீலகிரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது..

தமிழ்நாட்டில் நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.. வரும் 27-ம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளது.. இதனால் இந்த 3 மாவட்டங்களுகு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 27-ம் தேதி வேலுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Read More : Flash : அதிமுக MP தம்பிதுரை மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

RUPA

Next Post

Flash : மோன்தா புயல் கரையை கடக்கும் இடம் அறிவிப்பு.. மணிக்கு 90 – 100 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும்.. வானிலை மையம் வார்னிங்!

Sat Oct 25 , 2025
தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. இது தொடர்ந்து மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்.27-ம் தேதி தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் இது புயலாக […]
Montha Cyclone

You May Like