வங்க கடலில் அடுத்த 3 மணி நேரத்தில் டிட்வா புயல் உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் மேற்கு வங்ககடலில் இலங்கையை ஓட்டிய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல், இலங்கையை ஒட்டிய பகுதிகளில் மேலும் வலுவடைந்து புயல் உருவாக வாய்ப்பு உள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதும், ஏமன் நாடு பரிந்துரைத்த ‘டிட்வா’ (Titva) என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. இந்த புயல் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து ஒரு சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது. டிட்வா புயல் உருவாகி 48 மணி நேரத்தில் வட தமிழ்நாடு – தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும்.
புயல் உருவாகி தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரப் பிரதேசத்தில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. டிட்வா புயல் உருவாக உள்ளதால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read more: தங்கம் விலை இனி குறையாது.. 2026-ல் ரூ.1.5 லட்சத்தை தாண்டும்.. அமெரிக்க வங்கி கணிப்பு..!



