இந்த சானிடைசர்களால் ஆபத்து!… மரணத்தை ஏற்படுத்தும்!… திரும்ப பெறும் நிறுவனம்!

Sanitizers: நச்சு மற்றும் மெத்தனால் இருக்கும் ஹேண்ட் சானிடைசர்களை திரும்ப பெறுவதாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), பல்வேறு வகையான சானிட்டைசர்களின் தரம் மற்றும் அதன் லேபிளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. அதில், அருபா அலோ ஹேண்ட் சானிடைசர் மற்றும் அருபா அலோ அல்கோலடா ஜெல் ஆகியவையில் நச்சு மற்றும் மெத்தனால் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அந்த சானிடைசர்களை திரும்ப பெறுவதாக FDA தெரிவித்துள்ளது. இந்த வகை சானிடைசர்கள் மே 2021 முதல் அக்டோபர் 2023 வரை அமெரிக்காவில் ஆன்லைனில் மூலம் விற்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

நச்சு மற்றும் மெத்தனால் இருக்கும் சானிடைசர்களை பயன்படுத்தினால் தோல் பிரச்சனைகள், கண்பார்வை குறைபாடு, குமட்டல், தலைவலி, மயக்கம், சிறுநீரக செயலிழப்பு, நரம்பு பிரச்சனை மற்றும் கோமா போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் அது இறப்பு வரை செல்லும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: வெயில் இந்த அளவை தாண்டினால் மரணம்தான்!… மனிதனால் எவ்வளவு வெப்பத்தைத் தாங்க முடியும்?

Kokila

Next Post

பெற்றோர்களே..!! உங்கள் குழந்தைக்கு இந்த ஆவணத்தை வாங்கிவிட்டீர்களா..? சீக்கிரம் எடுங்க..!!

Thu Apr 11 , 2024
குழந்தைகளுக்கு பெற்றோர்கள் எடுக்க வேண்டிய ஆதார் அட்டை குறித்தான முக்கிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை பதிவு செய்வதற்கான வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது, நாட்டு மக்கள் அனைவருக்கும் 12 இலக்க தனித்துவ எண்களைக் கொண்ட ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக வழங்கி வருகிறது. ஆதாரில் ஒரு தனிப்பட்ட குடியினரின் பெயர், வயது, முகவரி, பயோமெட்ரிக் விவரங்கள் போன்ற அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படுகிறது. இதேபோல், 2018 முதல் […]

You May Like