திரைத்துறையை பொறுத்தவரை ஓரிரு படங்கள் சேர்ந்து நடித்தாலே நடிகர்கள் நடிகைகள் பற்றிய கிசுகிசுக்கள் பரவத் தொடங்கிவிடும். இந்த கிசுகிசுக்களில் சிக்காமல் இருக்கும் பிரபலங்கள் மிகவும் குறைவு என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா ஜோடி அடிக்கடி இதுபோன்ற கிசுகிசு செய்திகளில் சிக்கி வருகின்றனர். மேலும் இந்த ஜோடி டேட்டிங்கில் இருந்து வருவதாக கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.
அந்த வகையில் தற்போது இந்த ஜோடி மும்பை விமான நிலையத்தில் இருந்து, ஒன்றாக வெளியேறி ஒரே காரில் புறப்பட்டது பேசு பொருளாகி உள்ளது.. கார் புறப்படும்போது இருவரும் மாஸ்க் அணிந்து, பின் இருக்கையில் ஒன்றாக அமர்ந்திருந்தனர். இதுதொடர்பான புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. எனவே இந்த ஜோடியின் டேட்டிங் வதந்தி சூடுபிடித்துள்ளது.
எனினும் ராஷ்மிகாவோ அல்லது விஜய் தேவரகொண்டாவோ இதுவரை அதிகாரப்பூர்வமாக காதலை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அவர்களின் சமூக ஊடகப் பரிமாற்றங்களும், ஒன்றாக இருக்கும் போட்டோக்களும் இந்த ஊகத்தை அதிகமாக்கி உள்ளன.
மிக சமீபத்தில், ரஷ்மிகா மஞ்சள் நிற புடவையில் தொடர்ச்சியான அற்புதமான படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். ஆனால், அவரின் போட்டோவின் பின்னணியில் இருக்கும் இடங்கள், விஜய் தேவரகொண்டா பதிவிடும் போட்டோக்களில் இருப்பது போலவே இருப்பதால் இருவரும் ஒரே இடத்தில் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
திரைப்படங்களில் ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டாவின் கெமிஸ்ட்ரிக்கு தனி ரசிக பட்டாளாமே உள்ளனர். குறிப்பாக கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் படங்களில் அவர்கள் ஜோடி சேர்ந்த பிறகு, இவர்களின் ரசிகர் வட்டம் பெருகியது.
திரைப்படங்களை பொறுத்தவரை ராஷ்மிகா மந்தனா ஆயுஷ்மான் குர்ரானாவுடன் தாமா படத்தில் நடித்து வருகிறார். இது இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடப்பட உள்ளது. மேலும் புஷ்பா 3 படத்தில் ஸ்ரீவள்ளியாக மீண்டும் வருகிறார். காக்டெய்ல் 2, தி கேர்ள்ஃப்ரெண்ட், ரெயின்போ மற்றும் ஏக் சாத் தோ டோ ஆகிய படங்களிலும் ராஷ்மிகா நடித்து வருகிறார்..
இதனிடையே விஜய் தேவரகொண்டா, கிங்டம் என்ற ஒரு ஸ்பை த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் ரவி கிரண் கோலாவுடன் SVC 59 மற்றும் ராகுல் சாங்கிர்த்யன் இயக்கிய ஒரு பீரியட் ஆக்ஷன் டிராமா VD14 ஆகிய படங்களையும் அவர் கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.