கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜூலை 31-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித்துறை.
கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜூலை 31-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான படிவங்கள் மற்றும் டிடிஎஸ் உள்ளிட்டவற்றில் குறிப்பிடத்தக்க திருத்தங்கள் காரணமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது பயனர்கள் எல்லோருக்கும் துல்லியமான வருமான வரி கணக்கு தாக்கல் அனுபவத்தை உறுதி செய்யும். இது தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வரும் என்று எக்ஸ் தளத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான படிவத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அதை அப்லோடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி அறிக்கைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட விரிவான மாற்றங்களைக் கருத்தில் கொண்டும், 2025-26 க்கான வருமான வரி பயன்பாடுகளின் அமைப்பு தயார்நிலை மற்றும் வெளியீட்டிற்குத் தேவையான நேரத்தைக் கருத்தில் கொண்டும், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.