அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்…!

college admission 2025

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப் படிப்புக்கு தொடர்ந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நடப்பு கல்வியாண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 31 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் விண்ணப்பப் பதிவை இன்று முதல் தொடர்ந்து மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக உயர் கல்வி அமைச்சர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; நடப்பு கல்வியாண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 31 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் விண்ணப்பப் பதிவை இன்று முதல் தொடர்ந்து மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் www.tngasa.in என்ற இணைய தளத்தைப் பயன்படுத்தி தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். ஜூலை 31 வரை விண்ணப் பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு சிறப்புப் பிரிவு மாணவர் களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 11-ம் தேதியும் பொது கலந்தாய்வு ஆகஸ்ட் 13-ம் தேதியும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பொதுமக்கள் கவனத்திற்கு.. இன்று முதல் இது எல்லாமே மாறப்போகுது.. முக்கிய மாற்றங்கள் என்னென்ன? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

Fri Aug 1 , 2025
இன்று முதல் உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கப் போகும் சில முக்கியமான மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.. ஆகஸ்ட் மாதம் தொடங்கி உள்ள நிலையில், பல புதிய அரசாங்க விதிகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.. இது பொதுமக்களின் செலவுகளை நேரடியாக பாதிக்கும். இந்த மாற்றங்கள் நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். ஆகஸ்ட் 1, 2025 முதல் உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கப் போகும் […]
New Financial Rules 5 1

You May Like