நோட்..! முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ம் தேதி வரை கால அவகாசம்…!

college admission 2025

முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ம் தேதி கடைசி நாள் என உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் ஜூலை 15-ம் தேதியுடன் முடிவடைந்தது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், மாணவர்களின் நலன் கருதி கடைசி நாள் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்; நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் ஜூலை 15-ம் தேதியுடன் முடிவடைந்தது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், மாணவர்களின் நலன் கருதி கடைசி நாள் ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 4-ம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். அதன்பிறகு, சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறும். பொது கலந்தாய்வு ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கும். கலந்தாய்வு மற்றும் சேர்க்கை பணிகள் முடிவடைந்து முதலாம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கான வகுப்பு ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய குட்நியூஸ்.. டோல் கட்டணம் பாதியாக குறையப் போகுது.. முழு விவரம் இதோ..

Wed Jul 16 , 2025
சுங்கக் கட்டணத்தை பாதியாக குறைக்க சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய நேடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு சுங்கக்கட்டணம் பெரும் தலைவலியாக உள்ளது. நீண்ட தூர பயணங்களில் ஒவ்வொரு சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.. அவ்வப்போது அரசு இந்த சுங்கக்கட்டணங்களை உயர்த்தி வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.. இந்த நிலையில் வாகன ஓட்டிகளுக்கு ஒரு குட்நியூஸ் வந்துள்ளது.. சுங்கக் கட்டணத்திலிருந்து நிவாரணம் அளிக்க […]
20250705035133 Toll P

You May Like