குட் நியூஸ்..! TET தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்.10-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு…! முழு விவரம்

TET 2025

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பித்து வந்தனர். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று, இந்த அவகாசம் செப்டம்பர் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பித்து வந்தனர். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்று முடிவடைந்தது. இந்நிலையில், தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று, இந்த அவகாசம் செப்டம்பர் 10-ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது.

இதுவரை விண்ணப்பிக்காத ஆசிரியர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக நாளை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு வாரியம் ஏற்கெனவே அறிவித்தபடி, நவம்பர் 15-ம் தேதி டெட் முதல் தாள் தேர்வும், 16-ம் தேதி 2-ம் தாள் தேர்வும் நடைபெற உள்ளன. தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடவும், அதை தொடர்ந்து டிசம்பர் மாதத்திலேயே பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வை நடத்தவும் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

Vignesh

Next Post

நீர், சோப்பு எதுவும் தேவையில்லை!. விண்வெளியில் துணி துவைக்கும் இயந்திரத்தை உருவாக்கிய சீனா!.

Tue Sep 9 , 2025
விண்வெளி வீரர்கள் விண்வெளியில் பல விஷயங்களுக்குப் பழக வேண்டியிருக்கிறது. அதில் ஒன்று, அழுக்குத் துணிகளைத் துவைக்க முடியாது என்பது. ஆனால் சீன விஞ்ஞானிகள் இப்போது இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர். விஞ்ஞானிகள் ஒரு சிறிய, சோப்பு இல்லாத சலவை இயந்திரத்தைப் பயன்படுத்தும் ஒரு தீர்வை முன்மொழிந்துள்ளதாகக் கூறியுள்ளனர். இந்த சலவை இயந்திரம் தண்ணீரைப் பயன்படுத்தாமல் மூடுபனி மற்றும் ஓசோன் மூலம் துணிகளை சுத்தம் செய்கிறது. இந்த சலவை […]
washing machine space china

You May Like