தமிழக போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு, 18 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த, 2016 செப்டம்பர் 1ம் தேதிக்கு முன்னதாக ஓய்வு பெற்றவர்களுக்கு, 18 சதவீதமும், அதன் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு, 9 சதவீதமும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 2,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை ஓய்வூதியம் உயரும். இதனால், 93,000 ஓய்வூதியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுத்துறை ஓய்வூதியர்களுக்கு தொடர்ச்சியாக அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் நிலையில், அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு 2015-ம் ஆண்டு இறுதி முதல் அக்டோபர் மாதத்துக்குப் பிறகு அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து பல போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகளைத் தொடர்ந்து, அகவிலைப்படி உயர்வு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த மாத ஓய்வூதியத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதிக்கு முன்னதாக ஓய்வு பெற்றவர்களுக்கு 18 சதவீதமும், அதன் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு 9 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.2,000 முதல் ரூ.4 ஆயிரம் வரை ஓய்வூதியம் உயரும். தீபாவளிக்கு முன்னதாக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்பட்டது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.