உலகின் மிகவும் பழமையான, தனித்துவமான மற்றும் அதேசமயம் மூடநம்பிக்கைகள் நிறைந்த பழங்குடியினமாகக் கருதப்படுகின்றனர் ஜாரவா மக்கள். “ஜாரவா” என்பது ‘மண்ணின் மக்கள்’ என்ற அர்த்தமுடைய சொல்லாகும். இவர்கள் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் வசித்து வருகின்றனர்.
ஜாரவா பழங்குடியின மக்கள் தங்கள் வித்தியாசமான வாழ்க்கை முறையால் உலக மக்களிடம் இருந்து விடுபட்டுள்ளனர். இவர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்று கூறப்பட்டாலும், அவர்கள் நீண்ட காலமாக இந்தியப் பெருங்கடல் தீவில் தான் வசித்து வருகின்றனர்.
வெளி உலக தொடர்பு துளியும் இன்றி தனிமையில் வாழும் ஜாரவா பழங்குடியினர் விலங்குகளையும் அந்தமான் கடலில் மீன்களையும் வேட்டையாடி உண்டு வாழ்கின்றனர். மீன்கள் மற்றும் நண்டுகளை வில் – அம்புகளால் வேட்டையாடி பசியாறுகின்றனர். மேலும் பன்றிகளை வேட்டையாடி உண்கின்றனர். ஆனால் இந்த பழங்குடியினரில் பல விசித்திரமான விஷயங்கள் மிகவும் பரவலாக உள்ளன. பிறக்கும் குழந்தைக்கு கூட மரண தண்டனை விதிப்பதுதான் இதில் அதிர்ச்சிகரமானது.
ஜாரவா பழங்குடியினரில், ஒரு குழந்தை அழகாகவோ அல்லது வெள்ளை நிறமாகவோ பிறந்தால் அந்த குழந்தைகள் பிறந்த உடனேயே கொல்லப்படுவார்கள்.. இந்த பழங்குடி மக்கள் கருமையான தோல் கொண்டவர்கள். அத்தகைய சூழ்நிலையில், ஒரு பெண்ணுக்கு வெள்ளையாக குழந்தை பிறந்தால், இந்த பழங்குடியினர் அந்த குழந்தையை ஏற்காமல் கொன்றுவிடுகிறார்கள்.
அவர்களை பொறுத்தவரை, வெள்ளை நிறமான குழந்தை என்பது வேறு சில பழங்குடி அல்லது வேற்றுமையாக கருதுகிறார்கள். ஜாரவா பழங்குடியினரில் குழந்தை கருப்பாக இருப்பது மிகவும் முக்கியம். இதற்காக, கர்ப்பிணிப் பெண்ணுக்கு விலங்குகளின் ரத்தம் வழங்கப்படுகிறது. கர்ப்பிணிப் பெண், விலங்குகளின் ரத்தத்தைக் குடித்தால், பிறக்கும் குழந்தையின் நிறம் கருப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
மேலும் வெளி உலக தொடர்பின்றி தனிமையில் வாழும் ஜாரவா பழங்குடியினரை சுற்றுலா பயணிகள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களை புகைப்படம் எடுப்பது, அல்லது வீடியோக்களை ஆன்லைனில் வெளியிடுவது சட்டவிரோதமானது ஆகும்.
Read more: உடல் எடையை குறைக்க தினமும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்..? – அவசியம் தெரிஞ்சுக்கோங்க