மத்திய அரசின் வருவாய் துறை, புலனாய்வுத் துறை, சிபிஐ, போதைமருந்து தடுப்பு பிரிவு, தபால் துறை, ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளில் குரூப் ‘B’ மற்றும் ‘C’ வகை பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தியுவரும் CGL (Combined Graduate Level) தேர்வு மூலம், 2025-ம் ஆண்டிற்காக மொத்தம் 14,582 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த அறிவிப்பு ஜூன் 9-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஜூலை 4-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபடியாக 32 வயது வரை இருக்கலாம். இதில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரையும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரையும் தளர்வு உள்ளது.
பணியில் போது பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு 3 வருடங்கள் தளர்வு உள்ளது. அதுவே எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தால் 8 வருடங்கள் வரை தளர்வு உள்ளது. 3 வருடங்கள் வரை பணியில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகபடியாக 40 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 45 வயது வரையும் தளர்வு உள்ளது.
கணவரை இழந்தவர்கள், விவகாரத்து பெற்றவர்கள், கணவரை பிரிந்து மறுமணம் செய்துகொள்ளாதவர்களுக்கு வயது வரம்பில் 35 வரை தளர்வு உள்ளது. இதுவே எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 40 வயது வரை தளர்வு உள்ளது.
தேவையாண ஆவணங்கள்:
- 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்
- பட்டப்படிப்பு சான்றிதழ் (01.08.2025 தேதியின்படி)
- வகுப்பு பிரிவு சான்றிதழ்
- மாற்றுத்திறனாளி சான்றிதழ் (இருப்பின்)
- முன்னாள் ராணுவத்தினர் சான்றிதழ்
- வயது வரம்பு தளர்வு எதிர்பார்ப்பவர்கள் அதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
- மத்திய அரசு பணியாளர் ஆட்சேபனை இல்லா சான்றிதழ்
- ஆதார் அட்டை
- வாக்காளர் அட்டை
- ஓட்டுநர் உரிமம்
- பான் அட்டை
- பாஸ்போர்ட்
- பள்ளி/ கல்லூரி அடையாள அட்டை
- பணியாளர் அடையாள அட்டை அல்லது அரசு அளித்த புகைப்படம் கொண்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை
தேர்வு முறை: கணிணி வழியில் இரண்டு கட்ட தேர்வுகள் நடைபெறும். முதல் கட்டத் தேர்வு ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இரண்டாம் கட்டத் தேர்வு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. தேவையான கல்வி தகுதி உள்ளவர்கள், எஸ்.எஸ்.சி.-யின் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ssc.gov.in
Read more:பாமகவிற்கு துரோகம் செய்தால் அதுதான் என் வாழ்நாளின் கடைசி நாளாக இருக்கும்.. அன்புமணி உருக்கம்..