டெல்லி பாஜகவின் அடுத்த மூவ்; நயினார் தலைமையில் புதிய குழு அமைப்பு..! பரபரக்கும் தேர்தல் களம்..!

Nainar nagendran 2025

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. முக்கிய அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.. அதன்படி தமிழக பாஜக சமீபத்தில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு 72 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.. அதன்படி 6 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டர்..


அண்மையில், பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து அவர் அதிரடியாக விலகியது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பதவி விலகல் சாதாரணமான ஒன்றா அல்லது தலைமைக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட விரிசலா என்ற சலசலப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் தேர்தல் மேலாண்மை குழுவை பாஜக தலைமை அமைத்துள்ளது.. 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும் கண்காணிக்கவும் நயினார் நாகேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொன். ராதாகிருஷ்ணன், எஸ்.ஆர். சேகர், ஆர்.என். ஜெயப்பிரகாஷ், மா.வெங்கடேஷ், மாலா, ராமப்பிரியன் உள்ளிட்டோ இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்..

Read More : தவெக கட்சி மாவட்டங்கள் அதிகரிப்பு.. விஜய் முக்கிய அறிவிப்பு..! பரபரக்கும் அரசியல் களம்..!

RUPA

Next Post

தவெக கட்சி மாவட்டங்கள் அதிகரிப்பு.. விஜய் முக்கிய அறிவிப்பு..! பரபரக்கும் அரசியல் களம்..!

Wed Feb 11 , 2026
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது.. இ இந்த நிலையில், தவெக கட்சி மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக […]
Vijay 2025 1

You May Like