ஃபரீதாபாத் அல் ஃபலாஹ் மருத்துவ கல்லூரி மருத்துவர்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் வெளிநாட்டு நபர் ஒருவர், செங்கோட்டை வெடி குண்டு வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு குண்டு தயாரிக்கும் முறைகள் பற்றிய விரிவான வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்திய உமர் நபியின் சக ஊழியரான முஜம்மில் அகமது கனாய் (Muzammil Ahmad Ganai), வெளிநாட்டை சேர்ந்த தீவிரவாத செயலை உத்தரவிடும் நபரிடம் இருந்து இருந்து குறியாக்கப்பட்ட (encrypted) செயலிகள் மூலம் 42 குண்டு தயாரிப்பு வீடியோக்கள் பெற்றுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
35 வயதான அகமது கனாய் என்ற தீவிரவாத கும்பல் பயன்படுத்திய வெடிமருந்துகளுக்கான சேமிப்பு இடத்தை ஏற்பாடு செய்தவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளார். வெடிச் சம்பவத்திற்கு 10 நாட்களுக்கு முன் அவர் கைது செய்யப்பட்டார்.
போலீசார் கானாயியின் இடத்தில் இருந்து 2,500 கிலோகிராம் வெடிமருந்து பொருட்கள், அதில் 350 கிலோ அமோனியம் நைட்ரேட் உட்பட அதிகளவு வெடிப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். டெல்லியில் நடந்த செங்கோட்டை வெடி வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று வெளிநாட்டு நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர்கள் “ஹன்சுல்லா”, “நிஸார்”, “உகாசா” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை உண்மையான பெயர்கள் அல்ல, புனைப் பெயர்கள் என விசாரணையாளர்கள் கருதுகின்றனர்.
“ஹன்சுல்லா” என்ற பெயரைப் பயன்படுத்திய நபர், மொத்தம் 40-க்கும் மேற்பட்ட குண்டு தயாரிப்பு வீடியோக்களை கனாய்க்கு அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. மற்றொரு முக்கிய ஹான்ட்லர், முகமது ஷாகித் பைசல் ஆவார்.. மற்றொரு ஹான்ட்லரான முகமது ஷாகித் பைசல், கலோனல், லேப்டாப் பாய், பாய் என பல புனைப் பெயர்களைப் பயன்படுத்தி உள்ளார்..
பைசல், 2020 முதல் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு தீவிரவாத குழுக்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் முக்கிய நபராகக் கருதப்படுகிறார்.
பைசல் தொடர்புடையதாக நம்பப்படும் தாக்குதல்கள்
அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, பைசல் பின்வரும் பல தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என நம்பப்படுகிறார்:
கோவை கார் குண்டுவெடிப்பு தாக்குதல் – 23 அக்டோபர் 2022
மங்களூரு ஆட்டோ ரிக்ஷா “தற்செயலான” வெடி – 20 நவம்பர் 2022
பெங்களூர் ராமேஸ்வரம் கேஃபே வெடி – 1 மார்ச் 2024
ஷாஹித் ஃபைசல் யார்?
‘சாகிர் உஸ்தாத்’ என்ற பெயராலும் அறியப்படும் ஷாஹித் ஃபைசல், பெங்களூருவை சேர்ந்த ஒரு பொறியியல் பட்டதாரி. 2012-ல் பெங்களூருவில் வெளிச்சத்துக்கு வந்த லஷ்கர்-எ-தைபா தொடர்புடைய சதி வழக்கில், இளைஞர் பொறியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டது. அப்போது முக்கிய குற்றவாளியாக அவர் கருதப்பட்டதால், ஃபைசல் இந்தியாவை விட்டு பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
அவர் சிரியா–துருக்கி எல்லைப் பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என விசாரணை அமைப்புகள் நம்புகின்றன. பெங்களூருவில் உள்ள ராமேஷ்வரம் கபே வெடிகுண்டு வழக்கை NIA விசாரிக்கும் போது, ஃபைசலின் அடையாளம் உறுதி செய்யப்பட்டு, அவர் தற்போது தப்பியோடிய குற்றவாளியாக பட்டியலிடப்பட்டுள்ளார்.
‘உகாசா’ யார்?
செங்கோட்டை வெடிகுண்டு வழக்கில் இடம்பெற்ற மற்றொரு நபர் ‘உகாசா’ துருக்கியில் தங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
செங்கோட்டை குண்டுவெடிப்பு விசாரணை
நவம்பர் 10-ஆம் தேதி டெல்லியில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்பு அமைப்புகள் ஃபைசல் தொடர்புடையதாக நம்பப்படும் ஐஎஸ் பயங்கரவாத இணைப்பு கொண்ட பலரை விசாரித்துள்ளன. இவர்கள் தற்போது கர்நாடக, தமிழ்நாடு சிறைகளில் உள்ளனர். டெல்லி வெடிகுண்டு வழக்கில் ஈடுபட்ட அனைத்து நபர்களின் அடையாளத்தையும் கண்டறிவது விசாரணையின் முக்கிய அம்சமாக உள்ளது.
Read More : வங்கதேசத்தை உலுக்கிய நிலநடுக்கம்; மேற்கு வங்காளத்திலும் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதி..!



