செங்கோட்டை கார் வெடிப்பு வழக்கு விசாரணையில் திய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச எதிர்-தீவிரவாத படை (ATS), டெல்லி போலீஸ் ஸ்பெஷல் செல் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் இணைந்து கான்பூரில் உள்ள கார்டியாலஜி இன்ஸ்டிட்யூட்டில் டாக்டர் முகம்மது அரீஃப் என்பவரை கைது செய்துள்ளன.
அரீஃப் தொடர்ந்து டாக்டர் ஷாஹீனுடன் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணை அமைப்புகள் கூறுவதாவது, ஷாஹீனின் மொபைல் போன் பதிவுகளை ஆய்வு செய்தபோது அரீஃப்பின் பெயர் வெளிச்சத்திற்கு வந்தது.
அரீஃப் NEET-SS 2024 தொகுப்பின் மாணவராக இருந்து வருகிறார். அவர் ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்தவர். மேலும், பரிதாபாத் (Faridabad) பகுதியில் உள்ள அல்-பலாஹ் பல்கலைக்கழகத்தில் (Al Falah University) தனது கல்வியை முடித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
லக்னோவைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் ஷாஹீன் ஷாஹித், கடந்த வாரம் கைது செய்யப்பட்டவர், தற்போது செங்கோட்டை கோட்டை கார் வெடிப்பு மற்றும் பரிதாபாத் தீவிரவாத குழு (terror module) வழக்குகளில் முக்கிய இணைப்பாக உருவெடுத்து வருகிறார்.
பரிதாபாத் தீவிரவாதக் குழு, ஜம்மு மற்றும் காஷ்மீர் (J&K) போலீஸ் நடத்திய சிறப்பு நடவடிக்கையின்போது உடைக்கப்பட்டது. அந்த நடவடிக்கை இரண்டு தீவிரவாத அமைப்புகளுடன் ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammad – JeM) மற்றும் அன்சார் ஃகஸ்வத்-உல்-ஹிந்த் (Ansar Ghazwat-ul-Hind – AguH) — தொடர்புடைய குழுவை கண்டறிய நடத்தப்பட்டது.
இதற்கு முன்னர், டாக்டர் முஸம்மில் அஹ்மத் கணாயி கைது செய்யப்பட்டார். அவர் வசித்த பரிதாபாத் மாவட்டத்தின் தௌஜ் கிராமத்தில் வாடகை வீட்டில் இருந்து பெருமளவு வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு மருத்துவர் நிஸார்-உல்-ஹசன், வெடிப்பு நடந்த நாளிலிருந்தே காணாமல் போயுள்ளார். அவர் அல்-பலாஹ் பல்கலைக்கழகத்தில் (Al-Falah University) பணியில் சேர்ந்திருந்தார். ஆனால், அவர் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டதாக ஜம்மு மற்றும் காஷ்மீர் நிர்வாகம் சந்தேகித்ததால், அங்கிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
நவம்பர் 10 -ம் தேதி டெல்லியின் சிவப்பு கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த ஹூண்டாய் i20 கார் வெடித்ததில், 13 உய்ரிழந்தனர்.. மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைண்டஹ்னர் செய்யப்பட்டுள்ளது. இந்த வெடிப்பு சம்பவம் டெல்லி நகரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
முன்னதாக வெளியான CCTV காட்சிகளில், அந்தக் காரின் பதிவு எண் ஹரியானாவைச் சேர்ந்தது என்றும், காரை ஓட்டிய சந்தேக நபர் கருப்பு முகக் கவசம் அணிந்திருந்தார் என்றும் தெரியவந்தது.
இந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, பரிதாபாத் மாவட்டத்தில் போலீசார் நடத்திய சோதனையில் சுமார் 350 கிலோ வெடிபொருட்கள், ஒரு AK-47 துப்பாக்கி, மற்றும் பெருமளவு குண்டு, காப்புத் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இப்போது செங்கோட்டை கார் வெடிப்பு மற்றும் பரிதாபாத் தீவிரவாத குழு (terror module) ஆகியவற்றுக்கு இடையே நேரடி தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய தீவிரமாக விசாரித்து வருகின்றன.



