மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தில் (NHIDCL) உள்ள டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடம்:
டெபியூட்டி மேனேஜர் (தொழில்நுட்ப பிரிவு) – 34
வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அதிகபடியாக 34 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி, ஒபிசி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியவர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு உள்ளது.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் (Civil Engineering) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், GATE தேர்வில் சிவில் பொறியியல் பிரிவில் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம். 2023, 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
சம்பளம்: தேர்வு செய்யப்படும் பணியிடங்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை என்ற அளவில் சம்பளம் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
* சிவில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
* தேர்வு நேர்காணல் கிடையாது.
* விண்ணப்பதார்கள் ஒரே மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அவர்களின் வயது அதிகம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.nhidcl.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.11.2025
Read more: துலாம் ராசியில் சூரியன்; இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத ஜாக்பாட் கிடைக்கும்!