ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் கட்டடங்களுக்கான வளர்ச்சி கட்டணம் அமல்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

திட்டமில்லா பகுதிகளாக உள்ள ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில், புதிய மனை பிரிவு கட்டுமான திட்டங்களுக்கு விரைவில் வளர்ச்சி கட்டணம் அமல்படுத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சென்னைக்கு வெளியில் உள்ள பகுதிகள் நகர் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., கட்டுப்பாட்டில் உள்ளன. இதில், மாஸ்டர் பிளான் எனப்படும் முதுமை திட்டம் தயாரிப்பு தொடர்பு நடவடிக்கையாக உள்ளது. தமிழ்நாடு அரசு ஒத்துழைப்புடன் கல்வி நிறுவனங்களுக்கு பங்கேற்புடன் முழுமை திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

அதாவது இந்த முழுமை திட்டம் உள்ள பகுதிகளில் மட்டும் தான் கட்டுமான திட்டங்கள் புதிய மனைப்பிரிவுகள் ஏற்படுத்தும் போது, வளர்ச்சி கட்டணம் அமல்படுத்தப்படும், வளர்ச்சி கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணத்தை வைத்து தான் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும். எனவே, வளர்ச்சி கட்டணம் வசூல் வந்து வசூல் அவசியமாகிறது. ஆனால், தற்போது மாஸ்டர் பிளான் இல்லாத பகுதி காலில் வளர்ச்சி கட்டணம் வசூலிப்பது கிடையாது.

நகர் ஊரமைப்பு சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு இனி வளர்ச்சி கட்டணம் உள்ளூர் திட்ட குழும பகுதிகள் திட்டமெல்லாம் பகுதிகளுக்கு விரிவுபடுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இனி திட்டமெல்லாம் பகுதிகளாக உள்ள ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் கட்டுமான திட்டங்களுக்கு விரைவில் கட்டணம் வசூலிப்பது அமலாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ’அங்க போய் நில்லு’..!! ரோகித் சர்மாவை அவமானப்படுத்திய ஹர்திக் பாண்டியா..!! உச்சகட்ட கோபத்தில் ரசிகர்கள்..!!

Chella

Next Post

BREAKING | தமிழ்நாடு முழுவதும் புதிதாக 20 சுங்கச்சாவடிகள்..!! மத்திய அரசின் அதிரடி திட்டம்..!!

Mon Mar 25 , 2024
தமிழ்நாடு முழுவதும் அடுத்த 2 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூரு – சென்னை விரைவு சாலை, விக்கிரவாண்டி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுக, திமுக மக்களவை தேர்தல் அறிக்கையில் சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும் என்ற வாக்குறுதி இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. Read More : ஊராட்சி, நகராட்சி, […]

You May Like