தற்காலிகமாக மாவட்ட மகமை மூலம் ஒரு பயிற்சி மேலாளர் மற்றும் ஒரு கணக்காளரை தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள ஏழை மகளிரை சுயஉதவிக் குழுக்கள் மூலம் வலுப்படுத்தி சமுதாய பொருளாதார மேம்பாடும், சுயசார்பு தன்மையும் அடையச் செய்து அவர்களை ஆற்றல்படுத்திடும் நோக்கில் சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் (CMTC) என்ற அமைப்பின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் மக்கள் அமைப்புகளின் திறன் மேம்பாட்டு தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட உள்ளது. இப்பயிற்சி மையத்திற்கு முற்றிலும் தற்காலிகமாக மாவட்ட மகமை மூலம் ஒரு பயிற்சி மேலாளர் மற்றும் ஒரு கணக்காளரை கீழ்காணும் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளது.
பயிற்சி மேலாளர் பதவிக்கான தகுதிகள்; மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் +2 கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 25 வயது முடிந்திருக்கவேண்டும். குறைந்தது 5 ஆண்டுகள் சமுதாய அமைப்புகளில் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். குறைந்தது 1 ஆண்டு சமுதாய அமைப்புகளுக்கு பயிற்சி கொடுத்த அனுபவம் இருத்தல் வேண்டும்.
கணக்காளர் பதவிக்கான தகுதிகள்; சுய உதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 25 வயது முடிந்திருக்க வேண்டும். கணிணியில் Tally, Account & Software தெரிந்திருத்தல் வேண்டும். குறைந்தது 2 முதல் 5 ஆண்டுகள் சமுதாய அமைப்புகளில் கணக்காளராக பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
மேற்காணும் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மேற்படி தகுதி இருப்பின் திட்ட இயக்குநர் மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை 2வது தளம், தருமபுரி என்ற முகவரிக்கு தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது