அமெரிக்காவைச் சேர்ந்த நிக் மற்றும் ஷாஹினா தம்பதியினருக்கு திருமணமான 21 ஆண்டுகளுக்குப் பிறகு வைர மோதிரம் கிடைத்தது. இவர்கள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் , நிக் தனது மனைவிக்கு வைர மோதிரத்தை கொடுத்து தனது காதலை வெளிப்படுத்துகிறார். இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன் பிறகு சில நாட்களிலேயே ஷாஹினா மோதிரத்தை இழந்ததாக தெரிகிறது.
அதன் பிறகு எத்தனை நாட்கள் தேடியும் மோதிரம் கிடைக்கவில்லை. இதற்கிடையில் கடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு பிறகு இவரது வீட்டில் உள்ள கழிவறையை மாற்றும் பணி நடந்துள்ளது.
அப்போது 20 ஆண்டுகளுக்கு முன்பு தவறவிட்ட மோதிரத்தை ஒருவர் எதிர்பாராத விதமாகக் கண்டுபிடித்தார். எதிர்கால சந்ததியினருக்கு இந்த மோதிரத்தை வழங்குவோம் என்று மகிழ்ச்சியான தம்பதியினர் தெரிவித்தனர்.