தமிழக மனிதவளத்துறை அமைச்சர் சரத், மைதானத்தில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே தன்னுடைய போனின் திரையில் போதைப் பொருள் ஒன்றை கார்டை வைத்து பொடியாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. போதைப் பொருட்களுக்கு எதிரான மாரத்தான் ஓட்டத்தில் முதல்வர் விஜய் கலந்து கொண்ட நிலையில் அமைச்சர் சரத்தின் வீடியோ இணையத்தில் வைரலானது.. அமைச்சர் சரத் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்..
இந்த நிலையில் அந்த வீடியோ குறித்து அமைச்சர் சரத் விளக்கமளித்துள்ளார். அதில் பேசிய அவர் “ ஒரு தவறான வதந்தி பரப்பி வருகிறார்கள்.. 2 ஆண்டுக்கு முன்பு ஒரு ஐபிஎல் போட்டிக்கு சென்றிருந்தோம்.. குடும்பத்தினர், நண்பர்களுடன் அங்கு சென்றிருந்தோம். என் குழந்தைக்கு அப்போது ஒன்றரை வயது. உடம்பு சரியில்லை. குழந்தையின் மாத்திரையை பொடியாக்கி தண்ணீரில் கலந்து கொடுக்கவே அப்படி செய்தேன்.
கிரிக்கெட் மைதானத்தில், அவ்வளவு காவல்துறை பாதுக்காப்பு இருக்கும். அத்தனை கேமராக்களுக்கு முன்பாக, அத்தனை பேருக்கு முன்பு எப்படி போதைப் பொருளை பயன்படுத்த முடியும்..? குழந்தைக்கு மாத்திரையை கொடுக்க அந்த மாத்திரையை பொடியாக்கிய போது, வீடியோ எடுத்துள்ளனர்.. அந்த வீடியோவை வேண்டுமென்றே தவறாக சித்தரித்து பரப்புகின்றனர்.. இது மனதுக்கு கஷ்டமாக உள்ளது” என்று தெரிவித்தார்.
Read More : திருச்சி கிழக்கில் போட்டியா..? மு.க. ஸ்டாலின் கொடுத்த நச் பதில்..!



