பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை மிருணால் தாக்கூர், தெலுங்கிலும் பிசியான வலம் வருகிறார்.. தமிழ் சினிமாவில் அவர் நடிக்காவிட்டாலும், தெலுங்கில் வெளியான சீதா ராமம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.. சீதா ராமம், ஹாய் நன்னா போன்ற படங்கள் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தன..
இந்த நிலையில் நடிகை மிருணால் தாக்கூர் நடிகர் தனுஷுடன் டேட்டின் செய்வதாக தகவல்கள் பரவி வருகின்றனர்.. மிருணாலும் தனுஷும் இந்த ஊகங்களுக்கு பதிலளிக்கவில்லை என்றாலும், இருவரும் அடிக்கடி சந்திப்பதால் இந்த வதந்தி தொடர்ந்து பரவி வருகிறது. தற்போது, இருவருக்கும் இடையே விஷயங்கள் தீவிரமாகி வருவதாகவும், தனுஷ் மிருணலை தனது குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிருணால் தாக்கூர் தனுஷின் இரண்டு மூத்த சகோதரிகளான டாக்டர் கார்த்திகா கார்த்திக் மற்றும் விமலா கீதாவை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்துள்ளார்.. இருவரும் டேட்டிங் செய்வதாக செய்தி வெளியான உடனேயே இது நடந்ததாக கூறப்படுகிறது… தனுஷின் சகோதரிகளும் சமூக தளத்தில் மிருணலைப் பின்தொடரத் தொடங்கியுள்ளனர்.
இப்படி இன்ஸ்டாவில் இருவரும் மாறி மாறி ஃபாலோ செய்து வருவதால், தனுஷ் ஏற்கனவே மிருணலை தனது குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.. மேலும் தனுஷின் குடும்பத்தினர் இந்த உறவுக்கு ஓ.கே சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.. இருப்பினும், இது வெறும் ஊகம் மட்டுமே, இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இருப்பினும், தனுஷ் – மிருணால் டேட்டிங் செய்வது உண்மைதான் என்றும், அவர்கள் ஊடகங்களிடம் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை என்றும் இருவருக்கும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சன் ஆஃப் சர்தார் 2 திரையிடல் நிகழ்ச்சியில், இருவரும் கலந்து கொண்ட நிலையில் மிருணாலும் தனுஷும் டேட்டிங் செய்வது குறித்த வதந்திகள் வேகமாக பரவியது.. இதற்கு முன்பு, தனுஷின் வரவிருக்கும் இந்தி படமான தேரே இஷ்க் மெய்னின் ராப் பார்ட்டியில் மிருணால் கலந்து கொண்டது இந்த ஊகத்தை மேலும் வலுப்படுத்தியது..
கடந்த ஜூன் மாதம் மும்பையில் கஜோல் நடித்த மா பாடத்தின் முதல் காட்சியின் போது கூட மிருணாலும் தனுஷின் நெருக்கமும் பிணைப்பும் பார்வையாளர்களை கவர்ந்தது..
இதனிடையே, மிருணலோ அல்லது தனுஷோ இந்த ஊகத்தை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. மிருணால் தனது எந்த உறவுகள் குறித்தும் ஒருபோதும் பகிரங்கமாகப் பேசியதில்லை. தனுஷைப் பொறுத்தவரை, அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார், பின்னர் 2022 இல் அவர்கள் பிரிவதாக அறிவித்தனர். இந்த ஜோடி யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..