அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீது அடுத்தடுத்து பல புகார்கள் குவிந்து வருகின்றன.
திருப்புவனத்தில் நகை திருட்டு புகாரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த வழக்கில் 5 காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதலில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட நீதிபதி இன்று தனது விசாரணையை தொடங்கினார்.
திருப்புவனம் அஜித்தின் கொலை வழக்கில் மிகப்பெரிய திருப்பமாக, அஜித் மீது திருட்டு புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே மோசடி வழக்கு உள்ளது என்ற தகவல் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது… வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்ததாக 2011-ம் ஆண்டு நிகிதா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்ப்பட்டுள்ளது..
2010-ல் துணை முதல்வரின் உதவியாளரை தெரியும் என்று நிகிதா மோசடி செய்துள்ளதாக எஃப்.ஐ.ஆர் பதிவாகி உள்ளது. பணத்தை கொடுத்தவர்கள் திருப்பி கேட்ட போது நிகிதா குடும்பத்தினர் மிரட்டியதும் தற்போது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீது அடுத்தடுத்து பல புகார்கள் குவிந்து வருகின்றன. அவர் மீதான பண மோசடி புகார் விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, ரூ.2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை பணம் பெற்றதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தற்போது மீண்டும் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்து வருகின்றனர்.
சார் பதிவாளர் வேலை வாங்கி தருவதாக் செல்வம் என்பவரிடம் இருந்து ரூ.25 லட்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளனர். அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சத்துணவு பணியாளர் வேலை வாங்கி தருவதாக முத்துக்கொடியிடம் ரூ.2.50 லட்சம், தெய்வம் என்பவரிடம் ரூ.9 லட்சம், வினோத் குமாரிடம் ரூ.7 லட்சம், முருகேசன் என்பவரிடம் ரூ.2.5 லட்சம் முறைகேடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நிகிதா தனது தாயுடன் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரை திருமங்கலத்தில் உள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு நிகிதா தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அஜித் மரண வழக்கில் பல சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன. பண மோசடி புகாரில் தொடர்புடைய நிகிதாவுக்காக தனிப்படை போலீசார் விரைந்தது ஏன்? எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யாமல் அடித்து துன்புறுத்த என்ன காரணம்? நகை காணாமல் போனதாக நிகிதா கூறிய புகார் உண்மை தானா? 10 சவரன் நகைக்காக தனிப்படை போலீசார் முர்க்கத்தனமாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? திருப்புவனம் காவல் நிலைய போலீசார் இருக்கும் போது, தனிப்படை போலீசார் எப்படி வந்தனர்?
தனிப்படை போலீசாரை வரவழைக்க கட்டளையிட்ட உயர் அதிகாரி யார்? நிகிதா கூறிய புகாருக்காக சீருடை இல்லாமல் தனிப்படை போலீசார் விரைந்து வந்தது எப்படி? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன.. இப்படி பல சந்தேகங்கள் எழுகின்றன. ஒரு மோசடி பேர்வழி கொடுத்த புகாரின் பேரில் தான் காவல்துறையினர் அஜித்தை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். ரூ. 25 லட்சம் வரை மோசடி செய்துள்ள நிகிதாவை பிடித்து விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும்..
Read More : நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன் கிடைக்குமா ? போதை பொருள் இன்று மாலை வெளியாகிறது தீர்ப்பு..